பக்கம்:வள்ளலார் யார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

வள்ளலார் யார்?


இப்பிறவியில் நமக்கு வேண்டும் உணவும். உடையும்

தடையில்லாமல் தருவான் துன்பங்களே யெல்லாம் துடைத்துப் போக்குவான். பிறர் புகழும் பெருமை யெல்லாம் தருவான்; மறுமையிலோ உறுதியாகச் சிவப் பேற்றையும் தந்துவிடுவான்; இதில் எள்ளளவும் ஐய மில்ல' என்று அறவுரை பகர்ந்தருளினர் அச் சுந்தரர்.

நைடதம் புலவர்க்கு ஒளிடதம் என்பது களகாவி யத்தைப் பற்றி வழங்கும் ஒரு பழமொழி. அக்காவியத் தைப் பாடிய கவிஞன் அதிவீரராமன் என்னும் அர சன். அவன் தனது காவியத்தைத் தன் அண்ணளுகிய வரதுங்கராம பாண்டியனிடம் காட்டி, அவன் பாராட் டைப் பெற விரும்பினன். வரதுங்கனே, தன்னைப் போல் பிறந்து இறந்து மறைந்து போன மன்னன் ஒரு வனத்தானே தம்பி பாடினுன் என்று எண்ணி, கள காவியத்தைக் கையால் தீண்டவும் விரும்பவில்லை. பிறந் திறக்கும் மக்களுள் எவரைப் பாடினுலும் அக்கவிஞ. லுக்கு நரகப் படுகுழி அங்காந்து காத்திருக்கிறது: என்று அறிவுறுத்தின்ை வரதுங்கராமன்.

"அங்கச் சுமைகொண்டு) எழுநான்கு

கோடி அழிநரகப் பங்கத்துள் வீழ அன்ருே பொன்று வார்தமைப் படுவதே"

என்று அறவுரை பகர்ந்தருளின்ை அம் மன்னன்.

இத்தகைய அருட்கவிஞர் வரிசையில் திருப்பாட் டுக்களாகிய தெய்வமணக்கும் செய்யுட்களைச் சித்த மெல்லாம் தித்திக்கப்பாடிய இராமலிங்க வள்ளலாரும் இணையற்று விளங்குகிருர், திருவருள் கைவரப் புெ്ൗ தெய்வப் பெருங் கவிஞராகிய அருட்பிரகாசர், அம்பலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/50&oldid=991846" இலிருந்து மீள்விக்கப்பட்டது