பக்கம்:வள்ளலார் யார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கஉ. வாழ்வில் ஒரு திருநாள்

மகனுக்குத் தக்க பருவம் வந்து விட்டதென்ருல் தந்தையும் தாயும் விரைவில் அவனுக்கு மணம் முடித்து வைத்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பெற்ற பெண் பருவமுற்று விட்டால் கண்ணுள்ள போதே கலியாணத்தைச் செய்து பார்க்க வேண்டும்' என்று பெற்ருேர் பேராவல் கொள்கின்றனர்.

இது பெண்கள் பெருகிவிட்ட காலம். வீட்டிற்கு வீடு பருவமுற்ற பெண்கள், தக்க மணமகன் கிடைக்கப் பெருமல் பெற்ருேருக்குப் பெருங்கவலே தந்து கொண் டிருக்கின்றனர். பெண்ணின் தந்தையோ, மாப்பிள்ளை கற்றவனுக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிரு.ர். பெண்ணின் தாயோ, மாப்பிள்ளே செல்வகை இருக்க வேண்டும் என்று பேராசைப்படுகிருள். உற்ருர் உறவி னர்களோ, இம் மாப்பிள்ளே உயர்ந்த குலத்தவனுக இருத்தல் வேண்டும் என்று கருத்தோடு கவனிக்கின் றனர். இங்ங்ணம் பலரும் பலவகையில் ஆராய்தற்குக் காரணமான ஆண்மகனேக் கணவனுக ஏற்றுக்கொள் ளக் காத்திருக்கும் பெண், அம் மாப்பிள்ளே ஆணழகன் தான என்பதை மட்டும் அறிய ஆவல் கொள்கிருள். பெண்ணுக்குப் பேருவகை யளிப்பது மாப்பிள்ளையின் கண்ணுக்கினிய கட்டழகு ஒன்றேதான். இதனை கன் ருக ஆய்ந்து கண்ட தமிழ் மூதாட்டியார் ஒரு பாட்டில் தெளிவாக விளக்கினர்.

'பெண்ணுதவுங் கால பிதாவிரும்பும் வித்தையே, எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய்-கண்ணிடையில் கூரியகற் சுற்றம் குலம்விரும்பும்; காந்தனது பேரழகு தான்விரும்பும் பெண்.’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/52&oldid=991847" இலிருந்து மீள்விக்கப்பட்டது