பக்கம்:வள்ளலார் யார்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் ஒரு திருநாள் 密翼 இக்காலத்தில் ஆண்பிள்ளைகளைப் பெற்றவர்கட்கு ஒரு கற்பேறு என்றுதான் சொல்ல வேண்டும். பெண் னிற்காக நடந்து நடந்து காலெல்லாம் தேய்ந்து போயிற்று' என்று கூறி வந்த காலம் மாறி, இப்போது பெண்வீட்டார் மாப்பிள்ளைக்காகத் தேடித் திரிந்து திண்டாடுகின்ற காலமாயிற்று. அதல்ை ஆண்மக்க ளேப் பெற்றவர்கள், பெண் வீட்டாரிடம் அளவுக்கு மிஞ்சிப் பேரம் பேசத் தொடங்கிவிட்டனர். எவ்வளவு நகை போடுவீர்கள்? எவ்வளவு ரொக்கம் தருவீர்கள் : கலியாணத்தை முடித்து விடுவீர்களா ? என்றெல் லாம் கேட்கின்றனர். மாப்பிள்ளே அரசாங்க அலுவல கைவோ வியாபாரியாகவோ இருந்து விட்டால் பெற். ருேர்கட்கு இரட்டை யோகம் என்றுதான் சொல்ல வேண்டும். - -

இப்படியெல்லாம் தேடித் திரிந்தும் தெள்ளத் தெளிந்தும் செய்யப்பெறும் திருமணத்தில் மணமகன் தில்லையைச் சேர்ந்தவகை இருப்பான், மணமகள் நெல் லேயைச் சேர்ந்தவளாக இருப்பாள். சென்னையிற் பிறந்த பெண்ணிற்கும், குமரி முனேயிற் பிறந்த கும்ரனுக்கும் திருமணம் நடைபெறலாம். மலே நாரத்தங் காயும் கடல் உப்பும் சேர்ந்தது போல மணமக்கள் கூடுகின்ற னர் என்று பெரியோர்கள் பேசுவர்.

கீழ்த் திசையிலுள்ள வங்கக்கடவில் ஒருவன் ஒரு நுகக்கோல் குச்சியை இட்டான். மேற்றிசையிலுள்ள அரபிக்கடலில் மற்ருெருவன் ஒரு நுகத்தடியினை இட் டான். அலைகளால் மொத்துண்டு தள்ளப்பெற்ற அவை இரண்டும் சின்னுளில் தென்றிசைக் குமரித் துறையில் வந்து கூடின. எப்படியோ நுகத்தடியி லுள்ள துளேக்குள்ளே குச்சி புகுந்து கோத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/53&oldid=644455" இலிருந்து மீள்விக்கப்பட்டது