பக்கம்:வள்ளலார் யார்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

வள்ளலார் யார்?


பேரிடம் சொல்லுவோம்; அவர்கள் சொல்வது போல் நடப்போம் என்ற முடிவுக்கு இருவரும் வந்து விடு கின்றனர். இங்ங்னம் எந்தச் செய்தியிலும் இறுதியில் உறுதிகூற நான்குபேர் வேண்டப்பெறுகின்றனர்.

இந்தப் பழமொழி தோன்றியது எப்போது எந்த அடிப்படையில் எழுந்தது? இவற்றைப்பற்றிச் சற்று ஆராய்வோமானுல் சைவ சமய குரவர்கள் நால்வர் காலத்திற்குப் பின்தான் இந்தப்பழமொழி வழக்காற் றிற்கு வந்திருக்க வேண்டும். சைவ சமய குரவருள்ளே, ஒருவராகிய மாணிக்கவாசகர் மூன்ரும் நூற்ருண்டில் வாழ்ந்தவர். அப்பரும் சம்பந்தரும் ஏழாம் நூற்ருண் டில் இருந்தவர்கள். சுந்தரர் ஒன்பதாம் நூற்ருண்டில் உலகில் திகழ்ந்தவர். இவர்கள் நால்வரும் வாழ்ந்து மறைந்த ஒன்பதாம் நூற்ருண்டிற்குப் பின்னரே இக் தப் பழமொழி, மக்கள் வாயிற் பிறந்திருக்க வேண்டும். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இப்பழமொழி, மக் கள் உள்ளத்தில் நன்ருக ஊறிப்போய் விட்டது. அது வும் சமய வாழ்வில் அந்த நால்வர் காட்டும் நெறியே கன்மையானது என்ற உண்மை தமிழகத்தில் நன்கு வேரூன்றிவிட்டது.

இக்கால்வர் பெருமக்களின் நல்லருட் பாசுரங்க ளில் உள்ளந் தோய்ந்த வள்ளலார், அவர்கள் காட்டிய அருள் நெறியிலேயே சென்று இன்பம் கண்ட ஞானச் செல்வராவர். அவர்கள் வாழ்வின் அற்புதங்களேயெல் லாம் எண்ணியெண்ணி எல்லேயில்லாத இன்ப வெள் ளத்தில் ஆழ்ந்த அடிகளார், அங்கால்வர் அமைத்த நெறியைச் செப்பனிட்டுச் சீர்செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/62&oldid=991852" இலிருந்து மீள்விக்கப்பட்டது