பக்கம்:வள்ளலார் யார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

வள்ளலார் யார்?


தமிழகத்தின் சமய வாழ்வில் நன்னெறி காட்டிய கால்வருள்ளும் காவுக்கரசர் மிகவும் பண்பட்ட தகவு டையார். எண்பத்தோராண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து எண்ணற்ற இன்னல்களுக்கெல்லாம் உள்ளாகிச் சுடச் சுடரும் பொன்போற் சுடர்வீசி நின்ற சொல்லரசர் அவர். அவருடைய அருமைப் பாசுரங்கள் எல்லாம் மிகுந்த உருக்கத்தை ஊட்டுவன. பல அரிய அனுபவ உண்மைகளே அ றிவிப்பன.

இம்முறையில் எழுந்த அவருடைய பதிகங்களில் ஒன்று திருவங்கமாலே என்பது. நமக்குள்ள தலே, கண், செவி, மூக்கு, வாய், கை, கால், நெஞ்சம் ஆகிய அங்கமெல்லாம் உலக வாழ்வு ஒன்றற்கே தரப்பெற். றுள்ளன என்று கருதுவது தவறு. உயிரின் ஈடேற்றத் திற்காகவும் அவை சாதனமாக அமைந்துள்ளன என் பதை உணர வேண்டும். உடம்பு அழிந்து போகுமா ல்ை உயிரும் அழியும் திடம்பெற மெய்ஞ்ஞானம் சேர வும் முடியாது. உடம்பை நன்கு வளர்த்தவரே உயிரை யும் வளர்த்தவராவர் என்று மொழியும் திருமூலர் மக் திர வாக்கு இங்குச் சிந்திக்கற் பாலதாகும். உயிர் திரு வருளுக்குப் பாத்திரமாகிப் பேரின்பத்தைத் துய்க்கப் பெருந்துணையாய் நிற்பதே உடல் என்பதுதான் அவர் கருத்து. ஆதலின் இவ் வுடலுறுப்புக்களே யெல்லாம் திருவருள் கெறியில் சிறுபொழுதாவது செலுத்த வேண்டும் என்ற கருத்தைத் திருநாவுக்கரசர் அங்க மாலேப் பதிகத்தில் பங்கமற விளக்கினர்.

'தலையே! நீ வணங்காய்-தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருங் தலைவனைத்

தலையே வேணங்காய்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/64&oldid=991853" இலிருந்து மீள்விக்கப்பட்டது