பக்கம்:வள்ளலார் யார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான்மாறி ஆடிய கற்பகம் 8 :

அம்பலவாணன் அருட்குழந்தையே என்று வாயார வாழ்த்தித் திருநீறு அணிந்தார். -

இத்தகைய இராமலிங்கர் ஒருகால் மதுரைத் திரு நகரைக் காண வந்தார். அங்கயற்கண்ணி தன்ளுெடும் அமர்ந்த ஆலவாயீசனத் தரிசித்தார். அப்பெருமான் அருகில் தென்றிசை நோக்கி வெள்ளியம்பலத்தே கால் வீசியாடும் கற்பகமாகிய கூத்தப்பெருமானேயும் தரி சித்தார். தில்லேக்கூத்தன் திருக்கோலத்திற்கும் மது ரைக்கூத்தன் திருக்கோலத்திற்கும் உள்ள வேறு பாட்டை உள்ளத்தே நினைத்தார். பொன்னம்பலக் கூத்தன் வலக்கால ஊன்றி இடக்கால விசி இன்பக் கூத்தாடுகின்ருன். வெள்ளியம்பலக் கூத்தனுே இடக் கா.ே ஊன்றி வலக்காலே வீசியாடுகின்றன். இந்த வேறுபாடு எதனுல் என்பதை எண்ணிஞர்.

பண்டொருகால் பாண்டியன் இராசசேகரன் என் பான் கூத்துக்கலேயினச் சின்னுள் பயின்ருன். சிறி தளவு பயின்றதுமே அவனுக்கு மேனி மெலிவுற்றது. கால்கள் வேதனேயுற்றன. உடனே மதுரைத் திருக் கோவிலே அடைந்தான். வெள்ளியம்பலக் கூத்தனத் தரிசித்து வேண்டின்ை. பெருமானே! அடியேன் சின்னுள் சிறிதளவே கூத்துக்கலையினைப் பயின்றேன். அதனுல் உடல் நலிவுற்றேன். நீர் எத்தனே காலமாக இங்கனம் ஆடிக்கொண்டிருக்கிறீர்! இவ்வாறு இடை யருது ஆடினுல் தும் மேனி வாடிவிடாதா? உமக்குக் களப்பும் இளைப்பும் உண்டாகுமே? நீர் ஆட்டத்தை கிறுத்தினலோ இவ் உலகம் இயங்கா தொழியும் ஆதலின் நுமது ஓயாத ஆட்டங் கண்டு வாட்டங் கொண்ட எளியேனது உள்ளம்

களிகொள்ளுமாறு: வ-6 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/83&oldid=644523" இலிருந்து மீள்விக்கப்பட்டது