பக்கம்:வள்ளலார் யார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. கெஞ்சில் விழுந்த இடி

அடி வயிற்றில் இடி விழுந்ததுபோல’ என்ருெரு

பழமொழி வழங்குவதுண்டு. எதிர்பாராத பேரிழப்

பொன்று எவர்க்கேனும் ஏற்படுமாயின் ஐயோ! அடி வயிற்றில் இடி விழுந்ததே' என்று வருந்தித் துடிப்பர். மன்னுயிர்க்கு வரும் இன்னலேத் தன்னுயிர்க்கு வந்தது போல் எண்ணி இரங்கும் தண்ணருளாளர் பிறிதோர் உயிர் துன்புறுங் காலத்துத் தாம் பெரிதும் வருந்துவர்; அதனைப் போக்குதற்குப் பெருமுயற்சி செய்வர். அதுவே அறிவுடையார் செயல் என்று அறிவுறுத்து வார் திருவள்ளுவர்.

அறிவினுன் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தன்நோய்போல் போற்ருக் கடை"

என்பது அவர் வாய்மொழியாகும்.

சைவ சமயாசாரியர் நால்வருள் ஒருவராகிய மாணிக்கவாசகர், பாண்டியனின் மதியமைச்சர். அவர் தமது அமைச்சுத்திறனுல் தென்னவன் பிரமராயன்' என்ற திருவுடைய விருது பெற்று விளங்கினர். பதினுறு ஆண்டுப் பருவத்திற்குள்ளேயே பார்வாய்க் கலைகள் அனைத்தும் கற்றுத் தெளிந்தார். இவரை அமைச்சராகப் பெற்ற அரிமர்த்தன பாண்டியன் பெரு மகிழ்வுடன் ஆட்சியை நடத்தின்ை. அங்காளில் அவன் தனது குதிரைப் படையைப் பெருக்குதற்கு விரும்பின்ை. களஞ்சியத்திலுள்ள பொன்னேயெல் லாம் எடுத்துச் சென்று எழில் மிக்க பரிகளை வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/85&oldid=644528" இலிருந்து மீள்விக்கப்பட்டது