பக்கம்:வள்ளலார் யார்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வள்ளலார் யார்?

வருமாறு அமைச்சரைப் பணித்தான். அரசனது ஆணேயைச் சிரமேற் கொண்ட அமைச்சர் பொன்னே எடுத்துக்கொண்டு கீழைக்கடல் துறையை நோக்கிச் சென்ருர். --- -

அமைச்சராகிய வாதவூரர் குதிரை வாங்கச்

செல்லும் வழியில் திருப்பெருந்துறைத் தலத்தை அடைந்தார். பெருந்துறை மேவிய பெருமானே வணங்கித் திருக்கோவிலே வலமாகச் சுற்றிவந்தார். அவர் வரும் வழியில் சிவபெருமானே குருந்த மர நீழலில் குரு வடிவாய் எழுந்தருளியிருக்கக் கண்டார். அடியற்ற மரம்போல் அப்பெருமானது திருவடியில் விழுந்து இறைஞ்சினர். ஞானுசிரியனுய் விற்றிருந்த ஈசன், வாதவூரர்க்குச் சிவஞானச் செல்வத்தை உப தேசித்தருளினுன். ஞானுேபதேசம் பெற்ற வாதவூரர் தம் ஞானுசிரியனுல் உபதேசித்தருளப்பெற்ற ஐக் தெழுத்து மந்திரத்தை வந்தித்து வாழ்த்தினர்.

'நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!

என்பது அவர் அருளிய சிவபுராணத் தொடக்க மாகும். -

சிவகாமச் சிறப்பையும் சிவனது பெருமையையும் விளக்கியருளிய வாதவூரரது வாக்கு நலத்தை உணர்ந்த பெருமான் மாணிக்கவாசகர்' என்னும் மாண்புறு பட்டத்தை அவருக்குச் சூட்டி மறைந்தருளினுன். வாதவூரர் குதிரை வாங்குதற்குக் கொண்டுவந்த பொன்னேயெல்லாம் திருப்பெருந்துறைக் கோவிலைப் புதுப்பிக்கவும் சிவனடியார்களே உபசரிக்கவும் செல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/86&oldid=991867" இலிருந்து மீள்விக்கப்பட்டது