பக்கம்:வள்ளலார் யார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

வள்ளலார் யார்?


ஆனந்தக் கூத்தாடி இன்புற்ருர். அவருக்கு அறுசுவை அமுதுாட்ட ஆசை கொண்டார்.

அப்பூதியடிகளின் மைந்தனகிய மூத்த திருநாவுக் கரசு, அடியவர்க்கு அமுது படைக்க, வாழையிலே கொய்துவரத் தோட்டத்துள் சென்ருன். இலே கொய் யும்போது அவனே விடநாகம் திண்டிவிட்டது. அடியவர் அமுதுண்ணல் தடையுறக் கூடாதே என் றெண்ணி உயிர்தாங்கி ஓடோடி வந் தான். தாயாரின் பக்கத்தில் குருத்திலேயைக் கொணர்ந்து வைத்து மயங்கி வீழ்ந்தான். அவனது உடம்பில் கண்ட குறி களால் நச்சரவம் தீண்டி மாண்டான் என்பதைப் பெற்ருேர் உணர்ந்தனர். பினவுடலேப் பாயுள் சுற்றி ஒருபால் வைத்து அடியவர்க்கு அமுதுTட்டத் தொடங் தினர்.

திருநாவுக்கரசர் அமுதுண்ண அமர்ந்தார். அப் பூதியடிகளின் மக்களெல்லோரும் உடன் அமர்ந்தனர். அவருள்ளே மூத்த திருகாவுக்கரசைக் காணுேம். ‘எங்கே மூத்த திருநாவுக்கரசு என்று வினவினர் அடியவர். இப்போது இங்கு அவன் உதவான்' என்று உரைத்தனர் பெற்ருேர். உண்மையை உரைக்க வென்று வற்புறுத்தினர் அடியவர். உடனே அப்பூதி யடிகள் நடந்ததைச் சொன்னுர். திங்களுர்த் திருக் கோவில் முன்னர்க்கொண்டு பிணத்தைக் கிடத்தினர். செந்தமிழரசராகிய திருநாவுக்கரசர் சிவபிரானச் சிந்தையில் கினைந்து கனிந்து விடந்தீர்த்த பதிகம் பாடினர். உறங்கி விழிப்பவனைப்போல உயிர்பெற் றெழுந்தான் மூத்த திருநாவுக்கரசு. பெற்ருேரும் உற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/92&oldid=991864" இலிருந்து மீள்விக்கப்பட்டது