பக்கம்:வள்ளலார் யார்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவரசும் பாவரசும் 3 #

ருேரும் பேருவகை பூத்தனர். திருநாவுக்கரசரின் திரு. வருள் திறத்தை வியந்து மகிழ்ந்து போற்றினர்.

பாவரசாகிய வடலூர் வள்ளலார், தாம் நிறுவிய சத்தியஞான சபையில் தைப்பூச தன்னுளிற் பெருவிழா எடுத்தனர். அதைக் காணப் பல்லாயிரம் மக்கள் பல் வேறு ஊர்களிலிருந்தும் திரண்டு சென்றனர். குறிஞ் சிப்பாடி வணிகர் ஒருவரும் அக்கூட்டத்துள் சென்ருர், அவர் செல்லும் வழியில் ஒரு கள்ளிச்செடியின் பக் மாகச் சிறுநீர் பெருக்குதற்காகச் சென்று உட்கார்க் தார். அங்கிருந்த புற்றில் வாழ்ந்த விடநாகம் பொங்கிச் சீறி எழுந்தது. அது கண்டு அஞ்சி நடுங்கிய வணிகர் 'வடலூர் இராமலிங்கத்தின்மேல் ஆணை’ என்று கத் திர்ை. அவ்வளவுதான்! படமெடுத்துப் பாய்ந்துவந்த நாகம் அடங்கியொடுங்கிப் புற்றின் வாயிலேயே தலையை வைத்து மூன்று நாட்களாக இரை தேடாது பட்டினி கிடந்தது.

வடலூர்த் தைப்பூச விழாவைக் கண்டு திரும்பும் குறிஞ்சிப்பாடி வணிகர், வள்ளலார் பெருமான் முன் னர் வந்தார். அப்போது வள்ளலார், மூன்று காட் களாகவா ஓர் உயிரைப் பட்டினி போடுவது? உடனே ஆணேயை அகற்றி வாரும்” என்று உத்திரவிட்டார். வள்ளலாரின் வாய்மொழியைக் கேட்டு வியந்த வணிகர் ஓடோடிச் சென்று, முன்னர்க் கண்ட புற்றை அணு கினர். புற்றின் வாயிலில் சோர்ந்து கிடக்கும் கச்சர வின் கிலே கண்டு கலங்கினர்; ஆணையை அகற்றினுள். அதன் பின்னர் அங்காகம் புற்றுள் சென்று மறைந்தது.

ஏழாம் நூற்ருண்டில் நாவரசின் திருப்பெயர் அப் பூதியடிகட்கு மந்திர மொழியாய்ச் சிறப்புற்று விளங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/93&oldid=644546" இலிருந்து மீள்விக்கப்பட்டது