பக்கம்:வள்ளலார் யார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

வள்ளலார் யார்?


யதுபோலப், பத்தொன்பதாம் நூற்ருண்டில் பாவர சாகிய இராமலிங்க வள்ளலாரின் திருகாம்மும் அவர் பால் பத்திபூண்ட அன்பர்கட்கெல்லாம் அரிய மந்திர மொழியாய்த் திகழ்ந்தது. இராமலிங்க அடிகளார் கூடலூர் அய்யாச்சாமி செட்டியார் வீட்டில் தங்கி பிருந்தபோது ஒருநாள் அவரது வீட்டின் பின்பக்க திருந்த வாழைத் தோட்டத்துள் சென்ருர், வாழை மரம் ஒன்றிலிருந் த நாகம் அவரது தலைமேல் திண்டி விட்டது. திருவருள் பெற்ற இராமலிங்கப் பெருமா $# மேனியைத் திண்டிய விடநாகம் உடனே மாண்டொழிந்தது. அவரது திருநாமத்தைச் சொல்ல ம் திண்டவந்த காகம் திண்டாது ஆணக்கு அடங்கி iன்றது. நாவரசர் ஆற்றிய அற்புதமும் பாவரசர் காட்டிய அற்புதமும் திருவருள் திறத்தை எத்துணைச் சிறப்பாக விளக்குகின்றன!

ாேவரசர் வாழ்வில் நடைபெற்ற அற்புதங்கள் பற் பல. அவற்றுள்ளே கல்லேத் தெப்பமாக மிதக்கச் செய்த அற்புதம், வள்ளலாரது உள்ளத்தைப்பெரிதும் கொள்ளை கொண்டுவிட்டது. சமண சமயத் தலைவ ராய் விளங்கிய நாவரசர் குலகோயின் துயரம் தாங்க மாட்டாமல் தமக்கையைச் சரண்புகுந்து சைவராயி னர். இதனே அறிந்த சமண மன்னனுகிய மகேந்திரப் பல்லவன் பல தொல்லேகளே அன்னவருக்கு விளைத் தான். அனேத்தையும் அவர் சிவனருளால் வென்ருர், இறுதியில் கல்லோடு பிணத்துக் கட்டிக் கடலில் தள்ளுமாறு கட்டளையிட்டான்.

கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/94&oldid=991863" இலிருந்து மீள்விக்கப்பட்டது