உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

செய்தது குற்றம். பூஜை பல செய்தும், பலன் தராதிருந்தது குற்றம். இதைத் தெரிந்ததும், எனக்கு ஆத்திரம் பிறந்தது, அடித்தேன், அலங்கோலப்படுத்தினேன்.

[இடைவேளைக்குக் கோர்ட் கலைகிறது]

காட்சி 2

இடம்: மாரி மாளிகை.

பாத்திரங்கள்: மாரி, பூஜாரி, மன்னார்சாமி.
[மாரி, கவலையோடு இருக்க, மன்னார்சாமி தைரியமூட்டுகிறான்]

மன்னார்: இப்படித் தைரியத்தை இழக்கக்கூடாது. தீர்ப்பு, நம் பக்கமிருக்கும். இது நிச்சயம்.

மாரி: தீர்ப்புக் கிடக்கட்டும். கோர்ட்டிலே மானம் போகிறதே. அவன் கேட்கும் கேள்விகள், ஈட்டிபோல் குத்துகிறதே.

மன்னார்: போக்கிரிப் பயல்.

மாரி: கொஞ்சம் புத்திசாலியுங்கூட. உண்மைதானே, அவன் கேட்பது. ஊரைக் கெடுப்பவர்கள் கோரிக்கொள்கிறார்கள், உழைப்பவர்களும் பூஜிக்கிறார்கள், ஏமாற்றிப் பிழைப்பவனும் என் தாயே என்றுதான் சொல்லுகிறான், ஏமாறுபவனும் என் அம்மே என்றுதான் சொல்லுகிறான். என்னால் யாருக்கு, என்ன செய்ய முடிகிறது. கெட்டவர்களை தண்டிக்க முடியவில்லை, நல்லவர்களை ரட்சிக்கவும் முடிவதில்லை. என்னால் ஆவது ஒன்றுமில்லையப்பா, என்று உண்மையைக்கூறவோ தைரியம் பிறப்பதில்லை. [பூஜாரி வரு-