உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

கிறான்] இந்தப் பாவிகளோ, ஓயாது, உடுக்கை அடித்து, நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், என்று கூறி என்னை முன்னால் நிறுத்தி, இவர்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளுகிறார்கள்.

பூசாரி: தாயே! உன் சக்தி உனக்குத் தெரியவில்லை. அந்த மகாபாவியால் தோஷமாக்கப்பட்ட கோயிலையும், சிலையையும், புதுப்பித்து வைக்க, “புண்யவான்கள்” கிளம்பி விட்டார்கள். விசேஷ பூஜை நடக்கப்போகிறது.

மாரி: கேட்டாயா, மன்னார்சாமி! எவனையோ, ஏய்த்து விட்டு இங்கே வந்திருக்கிறான், பூஜாரி. அவன் எவனோ, எத்தனை குடியைக் கெடுத்தானோ? யாரார் மனதைப் புண்ணாக்கிப் பணம் சேர்த்தானோ, அவனிடம் இவன் பங்கு வாங்கி, என்னைப் பங்கப்படுத்துகிறான்.

பூஜாரி: தங்கத்திலே குடம், வெள்ளியிலே மணி, முத்துமாலை.

மாரி: இன்னமுமா, இந்தச் சுமைதாங்கி வேலை எனக்கு? வேண்டவே வேண்டாம். எனக்கு எவனும் பூஜையும் செய்ய வேண்டாம். பிறகு, அந்தப் போக்கிரி செய்ததுபோல, அக்ரமமும் செய்யவேண்டாம்.

பூஜாரி: தாயே! அவனைச் சும்மாவா விடுவார்கள்? அவன் போக்கிரி என்றா எண்ணுகிறீர்? போக்கிரியல்ல! எவ்வளவோ பெரிய போக்கிரிகளெல்லாம், உன் பெயரைக் கேட்டாலே, நடுங்கிவிடுவார்களே. அவன் ஓர் நாஸ்திகன். சாமியில்லை, என்று பேசுபவன். அதை ருஜுப்படுத்தவே, கோயிலிலே புகுந்து காலித்தனம் செய்தான்.

மன்னார்: ஓஹோ! அப்படியா? சரியான பாயின்ட் கிடைத்தது, சரி புறப்படுவோம் கோர்ட்டிற்கு, பயலைத் தீர்த்துக்கட்டிவிடுகிறேன்.