உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளிநாயகியின் கோபம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

காட்சி 3

இடம்: திருப்பதி.

பாத்திரங்கள்: வெங்கடேஸ்வார், மாரி, மன்னார்சாமி.
[திருப்பதி வெங்கடேஸ்வரர், அழகிய வெள்ளித்தேரில் உட்கார்ந்துகொண்டு பவனி வருகிறார்]

மாரி: மன்னார்சாமி! சூரியனுடைய கிரணங்கள், அந்த வெள்ளித் தேரின்மீது படுவதால், எவ்வளவு பளபளப்பான காட்சியாக இருக்கிறது பார்த்தாயா?

மன்னார்: தீராத வல்வினைகள் தீர்த்து வைப்பான் கோவிந்தா, என்று பக்தர்கள் கோஷித்தபடி இருக்கின்றனரே!

மாரி: ஆமாம்; அதனால்தான் அவர் ஏறாத தேர் ஏதுமில்லை, கோபாலா என்று ஜோராகப் போகிறார்.

மன்னார்: உனக்கு மட்டும் என்ன? வேண்டுமென்றால் வெள்ளித்தேர் கிடைக்காதா?

மாரி: கிடைத்ததே, உடம்பெங்கும்காயம். போதாதா? அண்ணா! வெங்கடண்ணா! வெங்குடு! (தேர் நிறுத்தப்பட்டு, வெங்கடேஸ்வார், இறங்கி வருகிறார். மாரியின், உடலெங்கும் இரத்தக்காயமாக இருப்பது கண்டு)

வெங்கட: மாரீ! இதென்ன கோலம்!

மாரி: மாயாஜாலக்காரனாச்சே! உனக்குத் தெரியாதா நான் பட்ட அவஸ்தை?

வெங்கட: என்ன நேரிட்டது?

மன்னார்: எவனோ ஒரு நாஸ்திகன், நெடுநாட்களாகக் கும்பிட்டானாம், பலன் கிடைக்கவில்லையாம், ஒருநாள் வம்புந்-