பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 வள்ளுவம்

காண்கின்றோம். என் குழந்தை பெரியவனாய் ஊரையே விலைக்கு விற்றுவிடுவான்’ என்று வாய்கொள்ளாது பாராட்டிய பெற்றோர், பின்னொருகால் மடவன், அறிவிலான், உலக்கைக் கொழுந்தன்ன உன்னையும் பெற்றெடுத்தேனே என்று வையவும் கேட்கின்றோம். இளமை யறிவொளி பின்னர் யாங்கன் இருண்டது? இளங்கொடி பற்றுக்கோடு பெறின் அதன் முனை என்றும் முனையாகவே நீண்டு செல்லும். அது போல் அறிவு இடைவிடாது தீட்டப் பெறுதற்கு நுண்ணிய கருத்துப்பொருள்கள் பற்றுக்கோடு ஆக வேண்டும். ஆளும் ஆட்சி வேறுபாட்டால் நாம் அறிவில் பல்வேறுபட்டு வாழ்கின் றோம். கல்வி கற்றோ பிற சூழ்நிலை பெற்றோ ஆளாமையால் அறிவிலார் போலப் பலர் தோற்றந் தரலாம். செல்வமின்மையை முயன்று ஈட்டித் துடைப்பது போல, அறிவின்மையைக் கல்விப் பொருளோடு தீட்டித் துடைத்துவிடலாம் என்று நம்புங்கள்.

மக்கள் பிறவற்றிற்போல அறிவாட்சியிலும் பல் நிலையினர் என்று கண்டார் வள்ளுவர். அறிவுப் பன்மை வாய்ந்த நம்ம னோர்க்கு ஒரே நடையில் அறஞ் சாற்றல் பலியாது என்ற கருத்தால், ஒரு கருத்தையே நடைப்பன்மையில் விளம்புவார் ஆயினார். ஒவ்வோர் அதிகாரமும் ஒவ்வோர் அறமே சொல்லுவது; எனினும் ஓர் அதிகாரத்துக்கு ஒரு பொருளுக்குப் பத்துக் குறள் அமைப்பானேன்? கருதுமின். அறிவு பலவாய் உள்ள மக்கட்கு ஒரு கருத்தினை நடை பலவாய்ச் சொல்லின், எந்நடையாவது அவரறிவைக் கவ்வ மாட்டாதா? அவரறிவு எந்நடையிலாவது பதியமாட்டாதா? என்று இயல்பறிந்தார் வள்ளுவர். அறங்கூறுகை தம் கடன் என்றளவில் நினைந்திருப்பரேல், ஆத்திசூடி முதலாம் நூல்கள் போலவும், கல்லோவியங்கள் இல்லாச் சிமிண்டு பூசிய கோபுரம் போலவும், பொறுமை, வெஃகாமை, வாய்மை வேண்டும் என்று அறத்தொகை . செய்திருப்பர். யாரும் செயல்வேண்டும் என்பது வள்ளுவம் ஆதலின், அறங்கூறும் கடனளவில் நில்லாது. யார்க்கு எங்ஙன் உரைத்தால் அவ்வுரை அவரறிவிற் பதியும் என அறிவுப்பதிப்புச் செய்யும் நடைக் கடனையும் மேற்கொண்டார். இந்நடை வேற்றுமை யன்றோ மறைமுகமாய் நின்று, அறிவில் எனை வேற்றுமை யுடையாரையும் திருக்குறள்பால் ஈர்க்கின்றது.