பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 139

மேலை விளக்கம் நமக்கு அறிவிப்பது என்ன? திருக்குறளகத்து இனிய நடைகளும் உள; அறிவுக் கீழ்நிலையாளரையும் திருத்த வேண்டி யாத்த இன்னா நடைகளும் உள. போற்றும் நடைகளும் உள: நெஞ்சம் சுடும்படி தொடுத்த வசவு நடைகளும் உள: அணைக்கும் நடைகளும் உள. விட்டுப்பிடித்தல் என்ற உலக வழக்கிற்கு ஒப்ப, அணையா நடைகளும் உள.

செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் (412) என்பது இன்னடை செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் (420) என்பது இன்னாநடை. உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (426) என்பது இயல்புநடை. பல கற்றும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் அறிவிலாதார் (140) என்பது சுடுநடை அணியன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு, அஃது இன்றேல் பிணியன்றோ பீடுநடை (1014) என்பது அழகும் நோயும் வந்த நடை. களித்து அறியேன் என்பது கைவிடுக. (928) என்பது அணைவு நடை. “கள்ளை உணில் உண்க சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார். (922) என்பது அணையா நடை. உலகு அவாம் பேரறிவாளன் திரு’ (215) என்பது இசையும், நச்சப்படாதவன் செல்வம் (1008) என்பது வசையும் அமைந்த நடை. திருக்குறள் நடையமைவு செயல் மேலது; விரிவுடையது; ஆசான் நெஞ்சம் காட்டுவது; குறள்நூல் கற்பார்க்குக் கைவிளக்கு அனையது என்ற துணிபால், “திருக்குறள் நடை” என்னும் தலைப்பில் பின்னொரு நாள் உரையாற்றும் திட்டம் உடையேன். ஆதலால் ஈண்டு இற்றைப் பொருளுக்கு ஏற்பச் சுருங்கச் சொல்லி நிறுத்துவன்.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் - போஒம் அளவுமோர் நோய் o (848) பிறர் சொன்னாலும் அறியான்; தன்னாலும் அறியான் என்ற நிலைநோக்கி எழுந்தது இக்குறள். மக்களுள் முன்னேற மாட்டா அறிவிலிகளும் உளர். அன்னோர் சாவது உலகிற்கு நலம் என்று சிலரை ஒதுக்கிவிட்டது போல் இக்குறட்பா நிற்கிறது. “யாது கூறினும் ஏலாப் பேதையரும் இருப்பர்; அந்நிலையினரைப் பற்றிப்