பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 1 53

செவ்வியை வள்ளுவரும் துய்த்தவர்; ஆதலால் நல்லவென நாம் அறியும் கல்விக் கருத்துக்கள் அவ்வாசானுக்கும் முகிழ்த்தன என்பது உயர்வு நவிற்சியன்று அளவு நூற்பட்டது. மேலும் விடுதலை அரும்பிய முகைப் பருவத்துத் தவழும் குழவிகளாகிய நம்க்குத் தோன்றல் செய்யாக் கல்வி நுண்மை பல உரிமைப் பழம் சுவைத்த வள்ளுவக் கிழவர்க்கு இயல்பாகத் தோன்றின என்பது அறிவு முரனோ போலிப் பெருமையோ?

பயிற்சியால் மூத்த அறிவுடையார் கூற்றுக்களைப் பயிற்சி யில்லாதார் போற்றிக் கொண்டு விரைந்து முன்னேறுமாப்போல, இந்திய வரசும் தமிழகமும் இனியேனும் தூக்கம் கடிந்து விழிப்புற்றுக் கல்வி பற்றிய வள்ளுவங்களை ஒர்ந்து தலைக்கொள்ளின், பளிச்சென உயர்தல் கூடும். ஒரு நூற்றாண்டு கடந்து பெறும் கல்வி வளர்ச்சி ஒரு பத்தாண்டுப் போழ்தில் கைவரும். தொண்ணுT றாண்டுக் காலக் கழிவும், எத்துணையோ கோடிப் பொருட் செலவும் எச்சப்படும். ‘கல்வி’ என உடன்பாட்டானும், கல்லாமை: என எதிர்மறையானும் ஈரதிகாரங்கள் நிறுவிய ஒரு பேராசான் வழி காட்டியாகான் என்று பேதைப்பட்டு அறைவார் உளரோ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’.எனப் பாரதி பாராட்டிய நல்லாசான், உலகப் பகுதியாய இந்தியாவிற்கும், இந்தியப் பகுதியான தமிழகத்துக்கும் வழித்துணை யல்லன் என்று ஒருசொற் கிளக்கப் படுங்கொல்? இத்துணையும் ஓராற்றான் அறிவுத்துடிப்பில் எழுந்த பீடுடைக் கிளவிகள். இனி நூலுட் புகுந்து கல்வி வள்ளுவங்களைக் காண்பாம். இற்றைக் கல்வி நிலைகளோடு சார்த்தி நன்று தீது துணிவாம். இதுவே செயக் கிடப்பது.

மக்களாய்ப் பிறந்தாரெல்லாம் கற்க என்பது வள்ளுவம். கற்றற்கு இன்னார் உரியர்; இன்னார் உரியரல்லர் என்ற ஆளொதுக்கம் திருக்குறளில் அறவே இல்லை. வாழ்வு வேண்டின் வேண்டுக கல்வி என்னும் அடிப்படையை நனி சுருக்கமாக, ‘66T என்ப வாழும் உயிர்க்கு (392) என்பர். “எல்லோரும் கற்க: பெண்டிரும் கற்க என்றவாறு வள்ளுவர் பிரித்து விதந்திலர். ஏன்? பால் காரணமாகக் கல்வி மறுக்கும் இழிபினைத் தங்காலத்துக் கண்டிலர். பரத்தை வழிப் பிறந்த மாதவி கற்றுத் துறை போகிய