பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வள்ளுவம்

அம் மாசு யாதுகொல் தேர்வுப் பித்து. கல்வியுலகை இஞ்ஞான்று ஆளுவது அறிவுத் தெய்வம் அன்று: தேர்வுப் பூதம் காணிர். நடைமுறை நோக்குழி, மாணாக்கரைத் தேர்வுரியோர் என்றும், ஆசிரியரைத் தேர்வு செய்வோர் என்றும், கல்வி வகுப்பாரைத் தேர்வு வகுப்பார் என்றும், கல்விக் களங்களைத் தேர்வுக் களங்கள் என்றும் கலைமகளைத் தேர்வு மகள் என்றும் அழைப்பதுவே இற்றைக்குப் பொருந்தும். தேர்வு மூச்சுத்தான் கல்வி முழுதும் ஒடுகின்றது. தப்பும் உணர்ச்சியே கள்வனுக்கு முந்துறுமாப்போல் தேர்ச்சி தாண்டும் துடிப்பே மாணாக்கர்க்கு முற்படுகின்றது. தேர்ச்சிக் கடப்புக்கெனவே ஆசிரியர்களும், நிலையங்களும் பாடுபடுப. மாணவர்கள் மூலப் பாட நூல்களைக் கல்லாது. தேர்வுக்கென எவ்வகையாலோ எழுதிய குறுக்குவழி நூல்களைக் கற்றொழிப. ஒருசிலர் பாட நூலுள்ளும் தேர்வுக்கு வருமென ஞானத்தாற் கருதிய பகுதிகளைக் கற்க முயல்ப. .4 நிலையங்களைக் காட்டிலும் G5Q56TG6 பிறப்பெடுத்த போலிக் கல்வி நிலையங்கள் அடுத்துப் பெருகு தலையும், மாணாக்கரானார் ஆண்டுத் தொகை தொகையாகப் புகுதலையும், பாடநூல்களினும் பாடப் போலி நூல்கள் அன்னோர் உள்ளங்களை ஈர்த்தலையும், சீர்தூக்கிக் காண வல்ல நாட்டன்பினர்க்குக் கல்விப் புரையோட்டம் தெற்றெனத் தோன்றும். தேர்வின் அழிநுட்பங்களை ஈண்டு விரிவுரை செய்வதில் பெரும் பயனில்லை. அறிவுக்கொல்லி என்பது அதன் தீமை காட்டும் சுருக்குப் பெயர். இவ்வெல்லாம் கற்க கசடற (391) என்னும் வள்ளுவ முரண்கள்.

கல்வித்தரம் வரவரப் பெரிதும் இழிகின்றது என்பது நாடறிந்த கூப்பாடு. என்போலும் ஆசிரியத் துறையினர் நாள்தொறும் கண்ணுற்று இரங்கும் கையறுநிலை. பல்லோர் தொழிற்கும் பல்வகை வருவாய்க்கும் தேர்வு நன்னிலமாக அமைந்திருப்பதால், அஃது எளிதிலும் விரைவிலும் கல்வியுலகை விட்டுப்போம் என நம்புகிலேன்; எனினும் ஒழிய வேண்டும் என்பது துணிபு. முற்றழிவு வருமுன் நாடுகாக்க எண்ணும் தலைமை யறிவினோர் தேர்வு முறையைத் துணிவொடு களைவாராக.