பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 60 வள்ளுவம்

அரசுகளும், மக்களும் செலவிடும் பல்கோடித் தொகையைக் கணக்கிட்டு நினைபவர், பொருள் நோக்கி இம்முறையைக் கைவிடார். நாள்தோறும் நாடுக (520) என்ற குறள் நெறி அரசுத்துறைக்கேயன்றி, வாழ்க்கை அனைத்துத் துறைக்கும் ஏற்கும் ஆதலின் தேர்வு ஒழிக, நாண்முகக் கேள்வி முறை வருக என்பது 5 GeuseuT.

இந்நாள் தமிழகச்சிறுவன். பத்தாட்டைப் பருவத்தான் நான்கு மொழிகள் பயில்கின்றான். உலகிற்கென ஒரு மொழியும், இந்திய வொருமைக்கென ஒரு மொழியும், இந்தியத் தொல்பண்பிற்கென ஒரு மொழியும், தாயெனத் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுகின்றான். இஃதோர் கல்வித் திருவிளையாடல், கண்டிர், மரம் என்ற ஒரு பொருளறிவிற்கு நால்மொழிச் சொற்களை, அந்தோ ஊர் கடந்தறியா இளஞ்சிறார்க்குக் கல்வித் திட்டம் அழுத்துகின்றது. வளர்ந்தது எது? அறிவன்று: பன்மொழிச் சொற்கூட்டம். கொடுத்தது பொருளறிவன்று: மொழியறிவு. அதுவும் செவ்விய மொழியறிவோ எனின் அன்று; கேவலம் ஒலிக்கூட்டம். இவ்வொலிக் கல்வியின் விளைவு என்னை: ஒலிப்பிழை. எம்மொழிக்கு உரிய நூலைப் படித்தாலும் பிறமொழி ஒலிகள் கலக்கும் வரம்புப் பிழை. மாணவர் பலரை எழுதச் செய்து, படிக்கச் சொல்லி, ஆசிரியன் நிலையில் இருந்து கல்வி கோலுவார் காண்பாராயின் என் கூற்று அளவறிவுண்மை என ஒப்புவர்.

பன்மொழிச் சொற்றொகுதி அளிப்பதுவே கல்விக் கோளாயின், அதற்குப் பெரும்பாடு வேண்டுவதின்று. நான்கு மொழி தொகுத்த ஒர் அகர நூலைப் பாடம் வைப்பது போதும். பன்மொழியோ, பன்மொழிச் சொற்கூட்டமோ, பல்லொலித் தொகுதியோ, நாம் கருதும் பரந்த மனப்பான்மையை ஒருஞான்றும் பயவாது என்பது பொதுக்காட்சி. அறிவுப் பரப்பே எண்ணப் பரப்பிற்குக் கால்கோள். பன்மொழிப் பரப்போ மாறாகப் புல்லறிவையே விளைக்கும். ஒண்மை யுடையம் யாம் (344) என்னும் செருக்கினையே வளர்க்கும். -

ஒருநாட்டு மக்கள் மொழிபல கற்றலை யான் மறுப்பதாகவோ இகழ்வதாகவோ,அருள் செய்து சிறிதும் மயங்கவேண்டா. பிறநாட்டுத்