பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வள்ளுவம்

பெருநிலப்பரப்பைச் செய் செய்யாக வரப்புக் கொண்டு உழவர் பயிர் போற்றுமாப் போல, மன்பதையைக் குடி குடியாகப் பிறப்புப் படுத்தி வாழ்வு பேணுவதே செயலொழுங்காகும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போலச் சிறு குடிச் செயலே முடிவில் உலகச் செயல் ஆம் என்ற நோக்கால், குடி செயல் வகை என ஒரதிகாரம் புதுமைப்பட நிறுவினார். செயல் வேண்டுவது வள்ளுவம்; ஆதலின், வினைக்கு உதவாப் பொதுமை அறையாது, வினை வேண்டும் சிறப்பிடம் - மனையிடம் - சுட்டினார்; உலக முழுமை பேசாது, உலக வடிப்படை - குடும்ப நிலைக்களம் - விளங்க ஒதினார்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு - (1025)

என்றபடி, பிற குடிக்கு அல்லது செய்யாத் தன் குடிச்செய்கை ஞாலச் செய்கையாம் என்பது வள்ளுவம். இவ்வுண்மை உணர்பவர், உலகம் யாங்ஙன் இயங்க வேண்டும், என்று வகுக்கும் முறை அறிவர். கடலிற் படு பொருளெல்லாம் கரையில் ஒதுங்குமாப் போல, நாம் காணும் அறிவு நலமெல்லாம் முடிவில் ஒவ்வொரு குடும்பத்தும் சேரவேண்டும். பண்டைத் தமிழ் மருத்துவ அறிவு குடும்பந்தோறும் பரவியிருந்த நிலை இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். இன்று பெருகிவரும் வாழ்க்கைப் பல்லறிவு வேறாக நிற்கின்றதன்றிக் குடும்பமாய்க் கலக்கவில்லை என்பதைக் கல்வி வகுப்பார் நினைவு கூர்வாராக. கற்பதும் அறிவதும் எல்லாம் குடிநல் வாழ்க்கைக்கு அன்றோ?

இதுகாறும் மெய்த்துறவு யாது குடும்ப அமைப்பின் சிறப்பு யாது என்பன குறித்து உரை செய்தேன். இனி ஒரு குடி பிறக்கும் தோற்றம் பற்றியும், ஒரு மனைக் காமவின்பம் பற்றியும், குடியுறுப்பினர்தம் இயல்நிலை பற்றியும் திருக்குறள் சான்றாகக் காண்போம். உடற்பசிபோல் மெய்யின்பம் இயல்பான உயிர்ப்பசி. உண்டால் உணவுப் பசி அடங்குதல் போல இணைவிழைச்சால் காமப்பசி தணிந்து நிற்கும். கள்ளப்பசியாவதெல்லாம் பசியாவ தில்லை. கண்டவாறு உண்பதெல்லாம் உடலுரம் ஆவதில்லை. புறப்பசி தீர்தற்கு ஒரொழுங்கு இருத்தல்போல் அகப்பசி தீர்வுக்கும் ஒழுங்கு உண்டு. உண்பது பசி தீர்த்தலோடு, உடம்பிற்கலந்து உடல்