பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 185

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன் (1109) என்ற இன்பப் பகுதி மூன்றனுள், பிணங்கலும் அப் பிணக்கம் தெளிதலும் ஆகிய இருதுறையும், அறிவுடைய அன்புக் காதலர்க்கே மனநலமாய் முடியும். கணவன் மனைவி இருவருமோ இருவருள் ஒருவர் தாமோ அறிவற்றவராயின், ஊடல் வம்பாகும்; உணர்தல் விளங்காமையாகும்; அதனால் இன்ப முரிவு ஏற்படும். புலவியும் விழுநர் கண்ணே இனிது (1309) என்பது குறள். புலவி, ஊடலுவகை என்ற அதிகாரங்கள் யாத்த ஆசிரியர் இவற்றின் வேறாகப் புலவி நுணுக்கம் என ஒரதிகாரம் செய்தார். காமத்துப் பால் இருபத்தைந்து அதிகாரங்களுள்ளும் இஃதொப்பது பிறிதில்லை காண். -

புலவி நுணுக்கமாவது யாது? ஒரமளிக்கண் இனிதிருக்கும் கணவன் மனைவி குடும்பச் செயதிகளைப் பேசலாகாது. குடிப் பேச்சுக் காரணமாக எழும் புலவி, கருத்து வேற்றுமைக்கு இடனாகிப் பாயற் பயனைக் கெடுக்கும். ஊடற்குப் பற்றும் காரணங்கள், ஊடும் அப்பொழுது தோன்றிப் புணர்ச்சியோடு அழிய வேண்டும் என்பது வள்ளுவம். ஊடற்கு முன்னும் புணர்ச்சிக்குப் பின்னும் நின்று நிலைக்கும் நீடிய செய்திகளைப் புலவிக் காலப் பொருளாகக் கொள்வரேல், இன்பத்தோடு மன நலமும் கெடும் என்பது ஒருதலை. நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம் என்பது ஒப்ப, அறிவுக் காதலர்தம் புலவிக் காரணம் கூடுங்கூட்டத்துப் பிறந்து ஆண்டே மறையவேண்டும். இப்பிறப்பில் நின்னைப் பிரியேன் என்றான் தலைவன்; மறு பிறப்பில் பிரிவான் என்று கருத்துக்கொண்டு, தலைவி ஊடினாள். ‘யாரினும் நின் பால் காத லுடையேன்” என்றான் தலைவன்: ‘யாரினும் என்ற சொல்லுக்குத் தன்கணவன் காதலிக்கும் மகளிர் பலருள்ளும் என்ற கருத்து எடுத்துக்கொண்டு, தலைவி புலந்தாள். வேற்று நாட்டிடைப் பிரிந்த காலத்து நின்னை நினைத்தேன்’ என்றான் தலைவன்: நினைப்பு என்பது ஒருகால் மறந்திருந்தார்க்கு அன்றோ தோன்றும் என்பதாகக் கருத்து வாங்கிக் கொண்டு, இன்பக் காய்வு காய்ந்தாள் தலைவி. இவ்வெல்லாம் சொல்நுணுக்கம் தலைக்கீடாய் எழுந்த ஊடற்