பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 15

குறட்பகுதிகளால், அகத்தை ஒளித்துக் காட்டும் பொய்த்திறமும் சொல்லிற்கு உண்டு காண். எனவே, சொல்லெனப்படுவது யாதெனின், மக்கள் நெஞ்சூர்தி யன்று: கருத்தூர்தி என்பதுவே உண்மை.

சொல்வழி ஆசிரியன் உள்ளம் காணவேண்டின், கற்பார்க்குப் பொய்யில் தூயநெஞ்சும் மயக்கமில் நுண்ணறிவும் வேண்டுவன. வானிலைக் காட்சிக்கு உதவுவது தொலைநோக்கிக் கருவி. அக்கருவியாற் பயனென் கண்ணிழந்தானுக்கு கண்ணிருந்தும் பயனென், நினைமின் அறிவில்லாதவனுக்கு. அறிவொடு கண்வைத்துத் தொலை நோக்கிவழி வானிலைகளைக் காணுமாப் போல, கற்பான் மாசில் நெஞ்சும் மயக்கமில் அறிவும் உடையனாய், நூலாசிரியன் சொல்வழி அவன் உள்ளநிலை காண அவாவ வேண்டும். சொல்லிடை ஆசான் நெஞ்சக் காட்சி கற்பவன் அறிவுடை மனத்தைப் பொறுத்தது. சொல்வர்ன் கருத்தின் ஒரு கூறே சொல்லெனக் கொள்க; அங்ஙன் கொள்ளாது, அவன் முழுக்கருத்தே சொல் என்பது உடம்பே மனிதன் என்பது போலப் பிழைபட்டது.

நெஞ்சங் காண்டல் என்பதன் பொருள் யாது? சொல்லியான் கருத்தாழம் உணர்ச்சி நுகர்ச்சிகளையும் சொல்லத் தூண்டிய சூழ்நிலையையும், அவன் எதிர்பார்க்கும் பயனையும் உயிராகக் காண்பது. இக் காட்சிக்கு அவன் ஆண்ட சொற்களையும் சொன் னடையையும் உடலாகக் கொள்வது. சொல்வழி இத்துணையும் காண வொல்லுமோ என்பீராயின், இவை மாத்திரமல்ல, சொல்லி யான் கல்வி ஒழுக்கம் குடிமை நாகரிகம் வரலாறு என்றின்ன வாழ்க்கை நிலைகளையும் காண வொல்லும் என்று திருக்குறள் அறிவூட்டும்.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை யுணரப் படும் (826) உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை யுணரப் படும்” (1096) என்ற குறள்களால், இன்சொல்வழிப் பகைநெஞ்சினையும் வன் சொல்வழிக் கேள்நெஞ்சினையும், அஃதாவது வெளிப்பட்ட பொய்ச் சொல் வழியும் நெஞ்சுண்மை காணலாம் என்பது வள்ளுவர்