பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வள்ளுவம்

ஆதலின், அன்றெழுந்த திருக்குறள் இன்று ஒட்டுங்கொல்? திருவள்ளுவர் இவ்வெல்லாம் முன் நினைந்து சொல்லவல்ல பேரறிஞர்கொல் என நம் நெஞ்சு ஐயுறுகின்றது. ஒழுக்கத் துறையில் வள்ளுவர் சொல் எக்காலத்துக்கும் ஒக்கும்; அரசுத் துறையில் ஒவ்வா என்று நம் மனம் துணிய விரைகின்றது. திருக்குறள் அரசியற் பழஞ்சுவடி என்று நம் உள்ளம் அழைக்க விரும்புகின்றது. பொய்யில் புலவன் சொல்லினான். பொய்யாத் திருக்குறள் சொல்லிற்று என்பதற்காக, நாம் எதனையும் ஏற்றுக்கொள்ளும் அடிமைப்பட்டிலம். நம் பகுத்தறிவே அப் பெருமகன் நம்பும் துணை. நம் செய்கையே திருக்குறள் வேண்டும் கோள். கற்பாரை அறிவடிமைப் படுத்திப் பேதைமை வாயிலாய், ஒன்றினை நுழைக்க முற்படுவார் வள்ளுவரல்லர்காண். “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (423) என்பது அவர் புரட்சிப் புத்தறம்; ஆதலின், நாம் பற்றற்று விழைவு வெறுப்பின்றி வள்ளுவர் நோக்கிய அரசியலை, நம் கால அரசியற் போக்கோடு ஆராய்வோம். .

பின்னொரு நாள் ஆகும் என்ற கருத்தால், சிறு வெட்டுத் துணிகளைத் தையற்காரனும், ஒட்டு நுரைகளை வண்ணானும் காத்துவைப்ப. ஒராண்டுவரை இருக்க வேண்டும் என்ற நினைவால், பள்ளிமாணாக்கர் தம் பாடநூல்களை அட்டை போட்டுப் போற்றுப. கல்வி முற்றியபின் ஆசிரியத் தொழிலுக்குச் செல்வேம் என்ற உறுதியால், அறிவியல் மாணாக்கர் ஆசான் குறிப்புக்களை நன்னர் எழுதிக் கொள்ப. அரியகாலத்து ஆம் என்ற துணிவால், விலை எளிய காலத்துச் சரக்குகளை மக்கள் முயன்று தொகுத்து வைப்ப. வாழ்நாள் முழுதும் பயன்படல் வேண்டும் என்ற எண்ணத்தால், சில பொருள்களைச் சிறந்தனவாக முதன் முறையிலேயே வாங்கிக் கொள்கின்றோம். இரு தலைமுறைக்காவது போத வேண்டும் என்ற எதிர்வால், ஒரு குடும்பி இடம் பரந்த நிலைவீடு கட்டுகிறான். அடிக்கடி செய்யவொண்ணாது என்ற தெளிவால், கோடிச் செலவில், நூற்றாண்டுக் காலம் நீடு நிலைக்குமாறு, திண்ணிய பெருங் கட்டடங்களைச் செய்யும்போதே அரசு வலுப்பெறச் செய்கின்றது. சமையல்போல, அப்பொழுதை அப்பொழுதை