பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு - 20?

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம் (567) ஆதலின், சிலர் தீமை செயக்கண்டு, குடியனைத்தும் வெருவந்த செய்யாமை அரசு வள்ளுவமாம். மிகப் பெரிய அறிஞனையும் அச்சுறுத்தும் ஆற்றல் ஒரு சிறு ஊர் காவலனுக்கு இன்று உண்டு. செய்யாச் சிறு தெருக்குற்றங்களைச் சாட்டி, ஆகாதவர்களை ஒறுக்கும் வன்மை இற்றை அரசியலுக்கு உண்டு. ஆற்றில் விழுந்த வனை ஒருவன் முன் வந்து கைதுக்கினால், அவன்தான் விழுத் தாட்டியவனோ என்று முதற்கண் ஐயப்படுவது இந்நாள் அரசியல்.

வள்ளுவ அரசு குடிமக்கட்கு முதற்கண் மதிப்புக் கொடுப்பது. குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்: (544) என்பர். அரசினைக் காப்பது குடிகள் கடன் அன்று: குடிமக்களைக் காப்பது அரசின் கடன் என்பது வள்ளுவம். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் (388), மன்னவன் கோல் நோக்கி வாழுங்குடி (542), துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு (557) என்பன காண்க. அரசின் நோக்கம் வெறும் தற்காப்பு அன்று; உண்மைத் தற்காப்பு எனப்படும் குடிக்காப்பு என்ற வள்ளுவத்தை இற்றை நம் அரசியலார் உணர்வரேல் எடுத்ததற் கெல்லாம் உங்கள் கடன், உங்கள் பொறுப்பு என மக்களைப் பார்த்துக் கூறுவதை நிறுத்துவர்; அரசேற்ற தங்கடன் எனத் திறம்பட வினையாற்றுவர்.

நாடும் அரசும் அரசுக்கோர் தலைமையும் தலைமைக்குப் பல் பண்புகளும் வேண்டும் என்று கண்ட வள்ளுவர் தலைவன் ஒருவனால் நாட்டின் நிலையறியவும் நாடெங்கணும் வினை யாற்றவும் இயலா என்று அறிந்தார். ஒரரசுக்குத் தலைவன்போல அமைச்சியலும் இன்றியமையா உறுப்பு என்பது வள்ளுவம். தலைவன் நிறையாற்றல் உடையவனேனும், முற்பட்டு நேரடியாக வினைசெய்வான் அல்லன். அங்ஙகன் வினைசெயல் வகை அமைச்சன்பாலது என்ற கருத்தால், வினைக்கூறுபாடெல்லாம் மந்திரி மேலனவாகத் திருக்குறள் மொழியும், இற்றை அரசியலுக்கும் இவ்வுண்மை பொது, அமைச்சர்களாகவே மக்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை. அவ்வெடுப்பு கட்சியுரிமை, பெரும்