பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 வள்ளுவம்

முன்வையாது. முன்வைத்துப் பின்னடையச் செய்யாது. இப்பய

னெல்லாம் பெறுகுவை இவ்வினை செய்யின் 6UTC)

பயனிலையை முன்வைத்து முன்னேறச் செய்வர்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின் (666) அரியவென்று ஆகாத இல்லை பொச்சாவாக் கருவியாற் போற்றிச் செயின் (537) விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி யுனின் (942) இவ்வனைய குறள்கள் செயலுய்ப்பு நடையன; கற்கும் போதே நெஞ்சிற்கு உரம் போடுவன. கன்னியோடு இடையறாது நட்பாடும் காளை ஒரு ஞான்று காதலாடுமாப்போலே, இக்குறள்களைப் பல்காலும் நினையவல்லோமேல், நாம் அரிய வினைவாய்ப் படுவோம் என்பது என் துணிபு. உள்ளியது எய்தல் எளிதுமன்; மற்றும்தான் உள்ளியது உள்ளப்பெறின் (540) என்பது செயல் பொய்யா வள்ளுவம். -

13. மக்கள் நெஞ்சு ஓராற்றான் இலக்கியப் பண்பு தழுவியது. பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நினைவுலகை மொழி ஆண்டு வருவதால், பிறப்பிலேயே நமக்கு இலக்கியத் திரு அமைந்து கிடக்கின்றது. கல்லாதாருங்கூட மொழி நயம்படப் பேசுவது இதற்கு ஒர் சான்று. கேட்டார் மனம் பதியச் சொல்லும் நடை வன்மையையே இலக்கியப் பண்பு என யான் ஈண்டுக் குறிப்பிடுகின்றேன். எட்டடி உயரத்தவன் என்றால் நெட்டையன் என்ற கருத்தும், மூவடி உயரத்தவன் என்றால் குட்டையன் என்ற கருத்தும் மனத்துக்குச் சட்டெனப் படுவதில்லை. பனைமரம் போன்றவன், கத்தரிக்காய் போன்றவன் என்று சொல்லாமுன், மிக நெடியோன், நனிகுள்ளன் என்ற உருவம் உடனே மனக்காட்சிப்படுகின்றது. அளவாகா ஒரு பொருளினை முற்றும் மேலாக அல்லது அறக்கீழாகச் சொன்னாற்றான் எண்ணிய பெருமை சிறுமைகளைப் பிறர்க்கு