பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வள்ளுவம்

கற்று எழுதாது. பிறிதொரு நூல் கற்று எழுதிய நூலொக்குமன். ‘நீ யாது நினைக்கின்றாய்; யாதினால் மயங்குகின்றாய்; எக்கருத்து உன்னைக் கெடுக்கின்றது; என்பவெல்லாம் யான் அறியாதே னல்லேன்: அறிந்து வைத்துத்தான் இடித்துரைக்க முன்வந்தேன். என்று ஆசான் உணர்ந்து கழறுங்காலை, மெய்யாகவே அவர் சொல்லை நம்பும் அறிவுடை நம்பிகள் ஆகின்றோம். ‘இலனென்று தீயவை செய்யற்க (205), பழையம் எனக் கருதிப் பண்பல்ல செய்யும் (700), பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் (580) அருமை யுடைத்து என்று அசாவாமை வேண்டும் (611) என்ற பகுதிகளில் வரூஉம் இலனென்று’. ‘பழையம் என, பெயக் கண்டும்’, ‘அருமையுடைத்து’ என்னும் முற்கூறுகள் வள்ளுவர் உட்கொண்ட பிறர் மனப்பாங்குகள்.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்தது.உம் ஆங்கே மிகும் (928) எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி (145) இவ்வனைய குறள்கள் கொண்டு கூறும் நடைத் தொடையன, நம் கருத்தைப் புரிந்து கொண்ட ஆசான் தன் கருத்தை நமக்குத் தெரிப்பன.

திருக்குறள் நடையமைப்பின் மேல் விரிவுரை செய்யும் ஈங்கண், அதிகார நடை அமைப்பைக் குறித்தும் ஒருசில சொல்லல் விரும்பத் தக்கதாகும். ஒரு குறள் கற்ற மாத்திரையானே, வள்ளுவர் நெஞ்சப் பொதிவு இதுவெனத் தெளிதல் அரிதரிது. செறிந்த பெரும் பயனை வரையறை விளைக்கும் என்ற துணிவால், அறம் ஒன்று நுவலும் ஒரதிகாரத்துக்குப் பப்பத்துக் குறள் வரம்பு கொண்டார் என்பதன்றி, அக்குறள் பத்துள் அவ்வறக் கருத்தெல்லாம் அடங்கிவிட்டன என்று கோடற்க, கல்வி, கல்லாமை, கேள்வி என்ற முவ்வதிகாரங்களையும் ஒருங்குவைத்து ஆய்ந்தாற்றான், ஆசான்தன் கல்விக் கோள்கள் பெரும்பாலும் புலனாகும். அறிவுடைமை, பேதைமை, புல்லறி வாண்மை என்ற அதிகாரங்களையும், செங்கோன்மை, கொடுங் கோன்மை, வெருவந்த செய்யாமை என்ற அதிகாரங்களையும் ஒரு