பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 247

சேரக்கொண்டு நோக்கினாற்றான், நிரலே அறிவு வள்ளுவங்களும், அரசு வள்ளுவங்களும் ஒரளவு தெளிவுபடும்.

அறிவுப் பொருள் பற்றிப் பலபடப் பொருட்பாலுள் மொழிந்த பின்றையும், நிரம்பாமை கண்ட வள்ளுவர் ‘அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) எனக் காமத்துப் பாலிற்சென்று, புதியதோர் அறிவுக்கூறு தெரிப்பக் காண்கிறோம். பனைமரக் கீழிருந்து பால் குடிப்பினும், குடிப்பது கள்ளெனப் பிறர் கருதுவர்; அதுபோல விடுதி முதலாய பிற இடங்களில் தங்கி மனைவியொடு இன்புறினும், கள்ளக்காதலியென்ற எண்ணமே முதற்கண் பிறர்க்குத் தோன்றும். ஆதலின், தனக்கு உரிய பொருளை அதற்கு உரிய இடத்திருந்து துய்ப்பதுவே முறை என அறிக. இவ்வுண்மையின் ஒரு கூறினைப் “பாத்துரண்’ என அறத்துப்பால் இல்வாழ்க்கை அதிகாரத்தில் சுட்டிய ஆசிரியர் தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால் (1107) எனக் காமத்துப் பாலில் மற்றொரு கூறினையும் - உரிய இடத்தையும் சேர்த்துச் சுட்டக் காண்கின்றோம். ஆதலின் ஒர் ஆசான் தன் உண்மை நெஞ்சம் காணவும், முழுத்தெளிவு கைவரவும் வேண்டின், அவன் எழுதிய நூல் முற்றும் ஒருமுறை இருமுறையல்ல, பன்முறையால் பல நோக்கால் ஆரவமரக் கற்றல் வேண்டும். இங்ஙன் கல்லாது ஆடு வாய்வைத்தனைய மக்கள் புல்லறிவும் திரிவும் நாட்டிடைப் பரப்பும் கீழோராவர்; பொய்யேர் உழவராவர்.

1. திருக்குறள் முழுமைத் தெளிவு பெறுவதற்கு முன், அதிகாரந்தோறும் ஒரு முடிபுத் தெளிவு செய்து கொள்ளல் வேண்டும். ஒரதிகாரப் பத்துக் குறள்களையேனும் தொகையாகத் தேர்வது இத்தெளிவைப் பயக்கும். கண்ணோட்டம் என்பது ஒரதிகாரம். கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (572), கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் (573) என்றவாறு, இப்பண்பினை வலியுறுத்துவர் வள்ளுவர். கண்ணோட்டத்தைச் சிறப்பித்துக் கூறும் ஒரிரு குறள்களை மாத்திரம் கற்று அமைந் தார்க்கு, ஆசான்தன் நெஞ்ச முழுமை தோன்றாது. பழகினவர் யாது சொல்லினும் அதனைத் தட்டிக்கழிக்காது நன்கு ஏற்றுச் செயல் வேண்டும் என்பதாகக் கருத்துக்கொள்வர். நண்பன் நம் செல்வாக் கால் பிறர்க்குத் தீது இழைக்க வேண்டினும், அவ்வேண்டுகோட்கு