பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 249

இந்நான்கும் மாசு ஆவன என்று ஆசான் தன் நெஞ்சக் கோளைக் கசடற இம்முக்குறட் கல்வியால் உணர்கின்றோம்.

2. ஒரதிகாரம் அறமொன்றே நுவலும் கடப்பாட்டது எனினும், அவ்வறந்தானும் பல்கூறு உடையது. ஆயிர ரூபாய் நாணயத்தாளைச் சில்லறையாக மாற்றிக் கொண்டு புழங்குதல் போல ஒரு பேரறத்தையும் சிறு கூறுகளாக வைத்துக் கொண்டாற்றான் செயல் ஏற்படும், வினைசெய் திறத்தானுக்குப் பெரு நோக்கொடு பகுதிச் செயலும் இன்றியமையாதது; ஆதலின், செயல் வேண்டும் வள்ளுவர் முழு அறங்களாகப் பெரிதும் விதியாது, வினைக் கூறுகளாக அறக்கூறு காட்டுவர். பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தின் கண், இடிக்குந் துணையாரும் (447), குடிமைக்கண். யார்க்கும் பணிவும் (960), மானத்தின்கண், இகழ்வார்பின் சென்று நில்லாமையும், (986), ஒழுக்கமுடைமைக்கண், உலகத்தோடு ஒட்ட ஒழுகலும் (140), சான்றாண்மைக்கண், பிறர் தீமை சொல் லாமையும் (984), பண்புடைமைக்கண், நகை யுள்ளும் இகழாமை யும் (995), ஈகைக்கண், அழிபசி தீர்த்தலும் (226), விண்னத் தூய்மைக்கண், சலத்தால் பொருள் செய்யாமையும் (660) சிறப்புக் கூறுகளாக நிற்றலைக் கற்க. கண்டின் முனை நூலைத் தொட்டு எஞ்சிய நூலை இழுப்பது போலவும், நீண்ட கையைப் பிடித்து ஆளைப் பற்றுவது போலவும், நாம் சிறப்புக் கூறினைச் செயற்படுத்தின், ஏனைக் கூறுகளும் தாமே அமையக் காண்போம்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும் (166) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (151)

இவை சிறப்புக்கூறு சுட்டும் அதிகார நடையன. பலவற்றின் மேலிட்டுப் புன்மக்கள் அழுக்காறு கொள்ப. அவற்றுளெல்லாம் ஒருவன் ஒருவனுக்கு அளிக்கும் கொடையைக் கண்டு பொறாமைப்படுவதையே விதந்தோதுவர் வள்ளுவர். தானும் கொடான்; பிறர் கொடுக்கவும் பொறான் என்பது ஒருசிலர் வாழ்வியல். நீ இவறினும் மற்றையோர் ஈவது காணின் மனம் பொறு’ என ஒரறக்கூறு தெரித்துவிடுவர். இப்படியே, பொறுமை