பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க நெறி வினைஞர்களே!

உண்மை வணக்கம். திருகுறளைப் பன்னிரண்டு தலைப்புக் களாக வைத்து உரையாற்றுவது என முன்னரே வகுத்துக் கொண்டேன். கொள்ளுங்காலை, கேள்வியன்பர்களாகிய உங்க எளின் ஐயப்பாடுகளை அறிந்து அவற்றைத் தெளிவிக்கும் முகத்தான், ஒரு சொற்பொழிவு தொடுப்பது என ஒதுக்கம் செய்து வைத்தேன். இடையிடையே ஒரு சில ஐயங்களை விளக்கிப் போந்தேனாயினும், அதனால் நும் அறிவு வேட்கை அடங்கியிருக்கும் என நம்புகிலேன். “இதுகாறும் ஒரு பொருள் நுதலியே சொற்பொழிந்தீர்; சொல்லாத எச்சப் பொருள்கள் இன்னும் பலவுளவே; அவ்வெல்லாம் பற்றிப் பொழிந்தால் அன்றோ, நீர் திருக்குறள் முழுமையும் எம்மனோர்க்குக் காட்டியதாகும் என்று நண்பர் சிலர் வலியுறுத்தினர். இவை இவை குறித்து வள்ளுவர் துணிந்த கருத்து யாது? எனத் தோழமை சான்ற பலர் வினவினர்.

ஒன்று விடாது 1330 குறள்களையும் நுனித்துக் காட்டுகை என் எண்ணம் அன்று. அங்ஙன் முற்றும் காட்டப் புகுகை குறள் கற்கும் உம் ஆர்வத்தைக் குறைப்பதாய் உம் பகுத்தறிவைக் கொல்லுவதாய் ஆகும்; என் செயல் நோக்கமும் சிதறுண்டு போம். இந்நினைவான் அன்றே பிறநாட்டுப் பெரியவர்தம் எண்ணங்களோடு, திருவள்ளுவர் குறள்களை ஒப்பிட்டு உரை விளக்கஞ் செய்வதை நிறுத்திக் கொண்டேன். அவ்வொப்புமை விளக்கம் கேட்பார்க்குக் கருத் தடுக்கை அளிக்குமேயன்றிச் செயலெழுச்சியைத் தூண்டாது என்று விட்டொழிந்தேன். இவ்வாறு செயலுக்கு நேர்முகமாகாது விடுத்த பொருட் கூறுகள் பலப்பல. அவ்வெல்லாம் பிறநிலை நோக்கிப் பேசற்கு உரியன; ஆயின், எல்லா நிலையினர்க்கும் செயல் உரித்து என்ற துணிபால் அதனையே என் பொழிவு முழுதும் உயிர் நாடியாக வைத்து உரை செய்து வருகின்றேன். இதனை நீவிர் நன்னர் அறிவீர்.