பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.54 வள்ளுவம்

மீண்டும் ஆள்வானேன்? ஒர்மின் இவ்வாட்சியால் நாம் அறியக் கிடப்பது என்?

எப்பொருள் மாட்டும் தோன்றா அகத்துணையாய் உடன் வாழும் முதல்வனை - கடவுளென - நமக்கு எட்டாது கடந்த பொருளென - வள்ளுவர் அறிமுகஞ் செய்ய விரும்பவில்லைபோலும். நீக்க மின்றி உறையும் இறைவனை - தூய நெஞ்சினால் நினைவார்க்கு எளிய அகப்பொருளை - எட்டாப் புறப் பொருளாக - கானல்போல் நீளும் சேய கடவுளாகப் பெயரிட, ஆசான் உள்ளம் இசையவில்லை போலும். “கருத்துக்கு நன்றும் எளியன்” என்பது நம்மாழ்வார் மொழி. இந்நிலைக்கண் முதலதிகாரத்துக்குக் ‘கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு இன்று இருப்பது முற்றும் பொருத்தம் இல்லை காண். கடவுள் என்னும் சொல் உரிய குறள் பத்துள்- குறள் நூலுள் - இன்மையானும், வான் சிறப்பு, நீத்தார் பெருமை என்றபடி, குறளகச் சொற்கொண்டே அதிகாரம் அமைத்தல் நூல் முழுதும் காணப்படும் நெறியாக வருதலானும், இறைவன் என்ற பெயர்மேல் ஈடுபாடு உடையராய் ஆசான் இருகால் ஆளலானும், முதல் அதிகாரத்துக்கு இறை தொழுகை’ என்னும் தலைப்பே பொருந்து வதாகும். ஆதலின், திருவள்ளுவர்தம் இறைக் கொள்கை யாது எனக் காண்போம். இங்ஙன் வினாச் சொல்லைத் திருத்திக்கொள்ள அன்பர்கள் உடன்படுவாராக.

எப்பொருட் கண்ணும் உறையும் முதல்வனை, உளன் என ஒருவன் ஒப்பினும், இலன் என ஒருவன் மறுப்பினும், அஃது ஒரு பொருட்டன்று. ஒப்புவதால் முன் இல்லா இறைவன் உளனாகி விடான். ஒவ்வாமையால் இலனாகிப் போகான். அவன் என்றும் உள்பொருள். அப்பொருளை உண்டென வரிந்து கட்டி ஒரு கட்சி போலப் பறை சாற்றுவதும், இல்லென மார்தட்டி ஒரு தொழில் போல வாயாடுவதும் எல்லாம் பேதைமைப்பால. ‘இறையுண்மை பரப்புவேன்’ எனக் கங்கணங் கட்டி முனைவது மெய்ந் நெறியன்று. மறுக்கும் சிலர்பால் இறைவன் இலன் என ஒப்பும் பொய்ந்நெறி யாகிவிடும். உள்ளான் இல்லான் எனா, ஆத்திகன் நாத்திகன் எனா, மக்களைக் கூறுசெய்தல் இறைவனே உண்மை இன்ம்ை என இரு கூறுடையான் என்று பட்டு முதலூனமாய் முடியும். ஏற்பினும்