பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 257

ஒழுக்கத்துள்ளும் வாய்மை நெறியாக - பொய்தீர் நெறியாகத் துணிவது இறை வள்ளுவம்.

பொய்வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்து மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை எனத் திருமங்கையாரும், வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும் எனத் திருநாவுக்கரசரும், இறை தொழும் நமக்கு முதற்கண் பொய்யா நெஞ்சம் வேண்டுவதை உள்ளுக. திருக்குறள் மக்கள் வாழ்க்கையை உயிர் நிலையாக வைத்துப் பிறப்பு எடுத்தது. திருவள்ளுவனாரின் எக்கொள்கைக்கும் மனித வாழ்வே அடிப்படை என்பதை நாம் மறப்பது கூடாது, அடிப்படை மறந்து போய்த் திறக்குறள் கற்பார் விளங்காமையே பெறுவர்காண்: கொள்கைப் பூசலே விளைப்பர்காண். இறையாயினும், ஊழாயினும், எழுபிறப்பாயினும், இம்மை மறுமை வீடாயினும், யாது பற்றிய கொள்கை யாதாயினும் ஆகியt; அவ்வெல்லாம் நாம் இவ்வுலகத்துக் கண்காண இன்று பெற்றிருக்கும் இம் மானிடவாழ்க்கைக்கு வலித்துய்மை நல்கல் வேண்டும்; ஒழுக்கவுரம் செய்யல் வேண்டும்; கூடிவாழும் மக்களினத்துக்குப் பொதுநலம் பயக்க வேண்டும். சுருங்கச் சொல்லின், கொள்கையால் குண வளம் பெருகல் வேண்டும். ஆசான் தன் இறைக்கோள் முதலா எக்கோளும் தூய செயற்கோள் உடையன என்ற நிலைக்களத்தைப் பொச்சாவாதீர்! பொச்சாவாதீர்!

திருக்குறட்கண் முழுக்க முழுக்க இறைவனைப் பற்றியே உரைப்பது வள்ளுவர் நெஞ்சம் அன்று. உலகம் கலந்த முதல்வனை, அங்ஙன் விளக்கப் புகுவது உலகப் பொருளாய் - அனைத்துக் கலையும் பற்றி விரிப்பதாய் - ஒராசான் அறிவிற்கு உட்படாததாய் வரம்பிகந்து நீளும். மக்கட் பொருளே திருக்குறட்பற்று; ஆதலின், தனிப்பேரிறைவனை நமக்கு வேண்டிய பொய்யாத் தலைமகனாக உருப்படுத்தித் தந்தார். இறையதிகாரம் கேவலம் உலக முதல்வனை விரிக்க வந்ததன்று காண்; உலகத்துட் பிறந்திருக்கும் மக்களுயிரின் முதல்வனாகப் பிரிக்க வந்தது.

இறைவனுக்கு ஒரு குறி கொள்க; கொள்ளற்க; ஒரு கரணம் செய்க, செய்யற்க: ஒரு மந்திரம் ஒதுக; ஒதற்க; ஒரு சமயம் படைக்க, ol. 17.