பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 279

வள்ளுவம். மிதி விண்டியை மேட்டிலும் எதிர்க்காற்றிலும் அழுத்தி உந்துவது...பார்வைக்குச் சிறு செயலாயினும், ஊழை உதைத்துத் தள்ளி முன்னேறும் மனித முயற்சியைக் காட்டவில்லையா? “காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி” என வரூஉம் ஆக்கமெல்லாம் மனித வாகையைச் சாற்றவில்லையா?

g என்றால் பழவினை என்று மயங்கிப் பொருள் கொண்டது ஒருபுறம் இருப்ப, பழவினை என்றால் முன் செய் தீவினையே என்று பின்னும் பேதுறுவாரே நம்முட் சாலப் பலர். ‘உண்மையறிவு’ (373) என்ற தொடருக்குப் பேதைமை யுணர்வு என ஒரவுரை செய்தல் முறையாகுமா? ஊழ் என்பது உலகச் சூழ்நிலை. அஃது ஒருவனுக்கு நன்று தீது ஆகிய இருதிறமும் செய்ய மாட்டுவது. அறிவுக் குறும்பால், தன்னால் யாதும் செய்ய முடியும் எனப் பிறர்க்குக் காண்பிக்க வேண்டும் என்ற தலைக்கிறுக்கால், நல்லுழையும் எதிர்க்கும் வெள்ளறிவுடைய மக்களை நாம் அடிக்கடி காண்கின்றோம். -

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு

அவ்வது உறைவது அறிவு (426)

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல் (637) என்ற குறள்களால், ‘ஆகூழொடு இயைந்து ஒழுகுக என்று அறிவறைவர்; செயல்வகை தெரிப்பர். ஏன்? ஒன்றிய சூழ்நிலை யொடு ஒத்துப்போகின், ஆற்றோரத்து மரம்போலப் பயன் விரைந்தும் மிகுந்தும் வரும் அன்றோ? -

ஊழ் தீதாயின், அது பெருவலியுடையது என்பதற்காகப் பின்னிடற்க: அதனை மனிதன் எதிர்க்கவும் புறங்காணவும் வேண்டும் என்பது வள்ளுவப்பறை. வெல்லும் ஆற்றல் இருந்தும், ஆகா ஊழொடு போரிடுவோம் என்ற மறவுணர்ச்சி மக்கட்கு இல்லாமையை ஆசான் உளங் கொண்டார்; ‘ஆகூழொடு ஒத்துவாழ்’ என்று அறிவு அறைவதைக் காட்டினும், ஆகா ஊழை எதிர்த்து வாழ்’ என்று நம் அடிமை தொலையத் தமிழ்க் கோல் கொண்டு, பல்காலும் முயற்சி முரசறைந்தார். ஊக்கம், மடியின்மை, ஆள்வினை, அறிவு,