பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 வள்ளுவம்

இடுக்கண் அழியாமை, வினைத்திட்டம் என்ற அதிகாரமெல்லாம் வென்றி நம் கையகத்தது என விளம்ப வந்தன அல்லவா?

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (620) என்பது வாழ்க்கைப் பொருகளத்துப் பகையூழைத் தோற்பிக்கும் நம் படைக்குறள். இவ்வெண்பாவில் ‘ஊழ் என்பது தீயூழைக் குறிக்கும். பெருவலியுடைய தீச்சூழ் நிலையைச் சின்னஞ்சிறு முயற்சியால் வென்று விடலாம் என்று ஏமாறாதீர் என அறிவிப்பான் உலை வின்றித் தாழாது உஞற்றுபவர் என்று நெடுமுயற்சி வேண்டினார். உணவுக்கு முன் பசியடங்குமாப்போல, அயரா உழைப்புக்குமுன், ஆகா ஊழ் அடங்கிவிடும்; ஐயுறற்க என்று இயல்பு காட்டுவான், ‘உப்பக்கம் காண்பர் என மெய்ந்நம்பிக்கை ஊட்டினார். ஊழ்வினை கீழ்ப்பட மக்கட்கு வாழ்வினை வேண்டுவது வள்ளுவம் என்பதற்கு, “அறிவுடையார் எல்லாம் உடையார் (430), எண்ணிய எண்ணியாங்கு எய்துப (666), துன்பம் உறவரினும் செய்க (667), “சிதைவிடத்து ஒல்கார் உரவோர் (597), பெருமை முயற்சி தரும்: (6.11) எனவாறு வரூஉம் பல பகுதியெல்லாம் பொய்யாச் சான்று அலவோ? தீயூழ் ஒருவனை வென்றது எனின். அதனால் வெல்லப்பட்டவன் முழுமடியன், நனிபேதையன் என்று கருத்தாகுமே யன்றி, அம்மெல்லிய வெற்றியால், ஊழாட்சியே உலகாட்சி என்று பொருளாகாது காண்.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி (371) பேதைப் படுக்கும் இழஆழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை (372)

ஒருவன் தன் சூழ்நிலை ஆகூழா, போகூழா, என்று கண்டு கொள்ளும் வழியை இக்குறள்கள் காட்டுகின்றன. ஆள்வினையும் அறிவும் வழங்கும் சூழ் எது, அது ஆகூழ் எனப் பற்றுக. மடியும் பேதைமையும் விளைக்கும் சூழ் எது, அது போகூழ் என நீங்குக’ என்று செயலூட்டுவது ஆசான் நெஞ்சம். ஆகாச் சூழ்நிலையைப் பிரிந்து ஆகுஞ் சூழ்நிலையை நட்புக்கொள் என்பது உள்ளுறை. இப்பொருளை முற்றும் மறந்தொழிந்தோம். ஒருவன் முயலாதும்