பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 25

f

ஆய்ந்துதர மாட்டுவள். வளர்ந்த கண், கால், கை முதலிய உறுப்புக் களையே அப்படி அப்படி முழுமையாகத் தந்துவிட்டாலென்ன? என்று மடம்பட்டு வினவுவோர் உளரோ முழுவுறுப்பாக வேண்டின், மரக்கண், மரக்கால், மரக்கையாகத் தான் கிடைக்கும் காணரீர்! ஆசிரியன்பால் அறிவுணவு எதிர்பார்க்கலாம். அவ்வளவுதான். உண்பதும், செரிப்பதும், செரித்தற்கு உழைப்பதும் வாழ வேண்டுவார் வினை. ஆதலின், வள்ளுவப் பெருந்தகை பொருட்பார்வை மாத்திரைக்கு ஒளி தந்தார். தம் சுருங்கிய குறளில், எண்ண வளர்ச்சிக்கு நிரம்பிய இடம் வைத்தார். இவ்வமைப் பாலன்றோ, திருக்குறள் பிறந்த நாள்தொட்டு ஈராயிரம் ஆண்டு களாக எல்லார்தம் உள்ள நிறைவிற்கு ஊற்றிடனாய் விளங்குகிறது. இதனால், “வையத்தார் உள்ளுவ எல்லாம் அளந்தார் ஒர்ந்து” எனவும், “உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டு என்ப” எனவும் வரூஉம் புகழுரை தகுதி சான்றன என அறிக.

இதுகாறும் பேசிய கருத்துக்களை ஈண்டு ஒருமுறை நினைவு கொள்வோம். வள்ளுவர் நெஞ்சுக்கும் குறள்களுக்கும் அமைந்த இயைபு, வித்திய வித்துக்கும் விளைந்த வித்துக்களுக்கும் உரிய தொடர்பாகும் என்று சொன்னேன். நோக்கு என்னும் நெஞ்சு காண் முறையை வழக்காலும் செய்யுளாலும் விளக்கினேன். வெள்ளைக் குறட்பா விரி என்னும் உரைக்கு ஒப்பத் திருக்குறள் உள்ளம் விரியும் எண்ணப் பெருக்கஞ் செய்வது என்று நிறுத்தி னேன். இதுவரை செய்த விரிவெல்லாம் எதன் பொருட்டு இனி யான் சொல்ல நிற்கும் எஞ்சிய பொருள் என்ன வள்ளுவர் நெஞ்சம். அந்நெஞ்சம் ஒவ்வொரு குறளிலும் உண்டு. அத் தனிக் குறள் நெஞ்சத்தை இன்று விளக்கப் புகுந்தேனல்லேன், திருக்குறள் முழுதும், அனைத்துக் குறள்களிலும், வீறு கொண்டு ஓடிப்பரந்து கலந்து நிற்கும் வள்ளுவர் தனிப்பொது நெஞ்சமே இந்நாள் யான் விளக்க எண்ணிய பொருள். குறளனைத்தினும் ஒரே நினை வோட்டம் காணக் கிடத்தலின், பொதுநெஞ்சம்’ என்றும், அந்நினைவு வள்ளுவத்தோன்றல் ஒருவர் மாட்டே பிறந்ததாதலின் தனி நெஞ்சம்’ என்றும் பண்படை கொடுத்தேன்.