பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 289

வேண்டும். சொல்லோ, எண்ணிய அளவில் யார் வஞ்சிப்புக்கும் வளைந்து கொடுப்பது;கருதியபடி மாற்றம் உறுவது. எலும்பில்லா நா எதுவும் பேசும் என்பது பழமொழி. உலக நடப்புக்கு இன்றியமையா மொழி, வாயுடைய ஒவ்வொருத்தன் சூழ்ச்சிக்கும் நனி எளிதாய்ப் பற்றுக் கோடாதலை உணர்ந்தார் வள்ளுவர். ஒருவன் யாதினை வெளிப்படுத்தக் கருதுகின்றான்; அக்கருத்தைக் காட்டுவது சொல். உண்மை கூறும் கருத்தினனாயின், சொல் உண்மையைக் காட்டும். பொய்மை வெளியிடும் கருத்தினனாயின், சொல் அக்கருத்தினையே பயக்கும். மொழி என்பது நெஞ்சூர்தி யன்று கருத்துர்தி. இவ்வியல்பினை மக்கள் மறந்தொழிப. சொல் ஒருவன் உள்ளம் காட்டும் பதிவுக் கருவி என்று முற்றும் நம்புப.

நாம் அளவிலா மக்களொடு நாள்தொறும் பழகுகின்றோம், அளவிறந்த செய்திகளை நாள்தொறும் கற்கின்றோம். பழகும் ஒவ்வொருத்தர் கூற்றையும், கற்கும் ஒவ்வொரு செய்தியையும் ஆராய்ந்து கோடல் என்பது கடைபோகும் செயலா? தலைசிறந்த முயற்சியாளர்க்கும் முடிவது கொல்லோ உலகத்துப் பலர் நல்லவர்கள் என்றும், பல செய்திகள் உண்மையன என்றும், சொல் பெரும்பாலும் சொல்லியவன் உள்ளங் காட்டுவது என்றும் நம்பிக்கைபற்றித்தான் மக்கள் யாரும் வாழ்க்கை நடத்தல் வேண்டும். “எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு (423) எனப் பகுத்தறிவு வலியுறுத்திய ஆசான், கேள்விப் பொருளோ பலப்பல; அவ்வனைத்து மேலும் அறிவோட்டம் செலுத்துதல் இயலுவதன்று எனக் கருதினார். ‘ஆராய்ந்து காண்’ என்று கேட்பார்க்கு அறிவறைவதைக் காட்டினும், பொய்யாது சொல் என்று கேட்கச் செய்வானுக்கு - சொல்லும் ஒருத்தனுக்கு - ஒழுக்கம் ஊட்டல் நன்றும் எளிதும் எனத் துணிந்தார். நீர்த் தேக்கத்தைத் திறப்பவன் தூய்மை செய்து விடுப்பானேல், குழாய் தோறும் பிடிக்கும் மக்கள் தண்ணிர் நலம் பற்றிக் கவலை கொள்ளார் அன்றோ? ஆதலின், அறிவாகுக! பிறவறமாகுக. அவ்வெல்லாம் நெஞ்சம் என்னும் முதல் நிலத்தைத் தூய்மை செய்யும் வாய்மை யொழுக்கத்துக்கு முன் நில்லா என்ற தெளிவால்,

6