பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 வள்ளுவம்

நிரம்பப்பெற்றது. ஒருவர் சொற்பொழிவில் தமக்கு ஏற்ற பகுதியை மட்டும் வெளியிட்டுக் கொள்வதும், மறுப்பு எழுத விரும்பும்போது ஒவ்வாப் பகுதியை மட்டும் போட்டுக் கொள்வதும், இடையிடையே பிரித்துக் கலைத்து வெளியிடலும். சொல்லிய சொற்களைத் திரித்து -, சொல்லியிருப்பர் என்று தம் எண்ணத்தை வெளியிடலும், செய்திகளை முந்தித் தருகின்றோம் என்று பெயர் வாங்க, ஊர்ப்பேச்சுக்களை ஒருவர் பேச்சாக வெளியிடலும் எனவாங்கு, செய்தித் தாள்கள் பல செய்யும் கொடுங்கோன்மைகள் எண்ணிறந்தன. அதனாலன்றோ, ‘யான் அங்ஙன் கூறிற்றிலேன். யான் கூறிய கருத்து இது’ என்றங்ாறு மறுப்பு அறிக்கைகளும் நாள்தொறும் வருகின்றன.

657 சொல்லியபடி, இன்றியமையாச் செய்தித்தாள் நிலை பொய்க்குப் பெரும்புகலிடமாயின. உடன்பட்டோ மறுத்தோ, தம் கருத்தை வரைதற்கென ஆசிரியப் பகுதி ஒன்று இருத்தலால், தாளாசிரியர்கள் என் செயல் தகும் செய்தித் தலைப்புக்களைச் செய்திச் சொற்களிலிருந்தே எடுத்தாள வேண்டும். இந்நன் முறை தழுவாது என் செய்ப? தம் கருத்துக்கு ஏற்பத் தலைப்புக் கொடுத்துக்கொண்டு. இதழ் கற்பவர் மனத்தைத் தொடக்க முதலே திரித்துச் செய்திகளைப் படிக்க விடுப்ப, இவ்வெல்லாம் உண்மை நிகழ்ச்சிகள் ப்ரவல் வேண்டும் என்ற செம்மை இல்லாமல், தம் கருத்தே பரவல் வேண்டும் என்னும் அவாவால் விளையும் முறைக் கேடுகள். பல்வேறு நுண்கருவிகளால் ஞாலமெல்லாம் செய்திகள் விரைந்து பரவும் இக்காலத்து, அரசியல் எழுச்சி காரணமாய் யாரும் விரும்பியாங்கு எழுதவும் பேசவும் உரிமைகள் வழங்கப்பெற்ற இக்காலத்து. கொள்கைத் துடிப்பு முதிர்ந்தோங்கும் இக்காலத்து, சொல்லாகுக: எழுத்தாகுக: வினைத்துறை யாதாகுக: தன் நெஞ்சு அறியப் பொய்யா வாய்மைப் பெருமகனே உலகத் தொண்டன் ஆவான் என்பது என் பாராட்டுரை. வாய்மையின் நலங்கள் இணைய வென அளக்க லாகாமையானும், பொய்யா வொழுக்கம் மக்களாய்ப் பிறந்த மனமுடையார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாமை யானும், திருக்குறளாசான் இறைநெறியைப் பொய்தீர் ஒழுக்கநெறி (6) யாகக் கண்டு காட்டினார்.