பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 வள்ளுவம்

நிலையில், கொன்றவன் இந்து என்றும், அவன் பெயர் கொடுசேய் என்றும் வானொலி விரைந்தோடிப் பரக்க அறிவித்தது. அதனால், இந்திய நாடு பேரழிவு எய்தாது கொலைப்பெருக்கம் இன்றி அமைதி யடைந்தது. கற்பனைக் கண்ணால் சிறிது நோக்குமின் கொன்றவன் மகமதியனாக இருந்தானேல், அச்செய்தி உடனே வெளியிடற்கு உரியதா? ஐயமாகவேனும் அறிவித்தற்கு உரியதா? மதம் கிடக்க, அவன் பெயர் தானும் கூறற்கு உரியதா? மகமதியனாக இருந்தானேல் உண்மை சொல்லாது, மக்கள் நம்புமாறு, அரசு தன் நெஞ்சு அறியப் பொய் சொல்லுமேல், அது நாட்டன்பினரால் வரவேற்கத் தக்கது அன்றோ காந்தியடிகள் மாய்ந்த கவலை தணிந்து, திங்கள் பலவாகியபின், கொலையாளி இவன் என உண்மை வெளியிடுவது பொதுப் பேரறம் அன்றோ? -

“தீமையிலாத சொலல் (291), புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் பொய்மையும் வாய்மை யிடத்த (292) என்ற இருகுறட் கண்ணும் மறைந்து கிடக்கும் ஆசான் நெஞ்சங்களைப் பிறழாது உணர்தல் நம் ஒழுக்கமாகும். மயங்கிப் பிறழ்வோமேல், வள்ளுவக் கொலை செய்த பெருங் குற்றப்படுவோம். எடுத்ததற்கெல்லாம் பொய் பகரலாம் என்று இழுக்குப்பட்டு, ஆசான் தாம் மெய்யாக்கண்ட உலகத் தனிப்பெரு நெறியை இகழ்ந்தவராவோம். ஈண்டு தீமை” ‘நன்மை என்பவை பிறர்க்குத் தீமை”, “பிறர்க்கு நன்மை என்ற பொருளன. பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு (984) என்பது காண்க. தன் தீது மறைத்துச் சொல்லலும், தன் நன்மைக்கு இல்லது கூறலும் எக்காரணத்தானும் வாய்மையாகா. ஒருவன் தனக்கு ஆக்கம் கெடினும், அழிவு தலைவரினும், கலங்காத் திண்மையால் ஒழுக்கம் காக்க வேண்டும் என்பது வள்ளுவம். ‘உயிர் நீர்ப்பர் மானம் வரின் (969), தன்னுயிர் நீப்பினும் செய்யற்க (327), ‘புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் (183), உற்றநோய் நோன்றல் (261), “ஒப்புரவினால் வருங்கேடு எனின் (220) என்ற பகுதிகளால் எனைப் புறப்பலி செய்தும், ஒருவன் தற்பண்பு ஒம்புவானாக என்று தனியறம் கரைவர். ஆதலின், இங்குச் சொல்லப்படும் தீமையும் நன்மையும் பிறரைச் சார்ந்தன என்பது வெள்ளிடை மலை. .