பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 299

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று (323)

இக்குறளால் தலைசிறந்த ஈரறங்கட்கும் உரிய தொடர்பு விளக்குவர். கொல்லாமை திரிபற்ற அறம் என்றும், வாய்மை மெய்யும் பொய்யும் ஆகிய திரிபுடையது என்றும் ஒருசாரார் கருத்து விளக்கிக் கொல்லா அறத்துக்கு முதலிடம் நிறுவுவர். ‘கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் (550) என்ற குறட் பகுதியானும், படைமாட்சி அதிகாரத் தானும் கொல்லாமையும் திரிபுடையது என்று அறிகின்றோம். கோறலும் அரசற்குச் சாதி தருமம் என்பர் பரிமேலழகர். ஆகலான், புரைதீர்ந்த நன்மை பயக்குங் காலைப் பொய் வாய்மையாதல் போலக் கொலையும் கொல்லா அறப்பாற்படும்; ஒறுத்தல் என்ற பெயர் பெறும்.

கொல்லாமை முதலறம்; வாய்மை இரண்டாம் தரத்தது என மேல்கீழ் தெரிந்தோதுதல் இக்குறட் கருத்தன்று. வாய்மையால் கொலை நிகழும் எனின், எங்ஙன் நடந்து கொள்வது என நடைமுறைச் சிக்கலை அறுக்க வந்தது இக்குறள். முன் விளக்கி யாங்கு, வாய்மைக்குச் செவ்விய தன் நெஞ்சு நிலைக்களம் ஆவதன்றி, செவ்விய முற்றறிவு நிலைக்களம் ஆவதில்லை. ஆதலின், மனம் அறிந்த ஒன்று பின் னொருகால் பொய்யாதலும் உண்டன்றோ? அறிவுத் தூய்மையொடு பொருந்தா வாய்மையால் ஒருவன் கொல்லுண்ட வழி, பின்னர் அவ்வாய்மை அறியாமை என்று காணின், சென்ற உயிர் மீண்டு வருங்கொல் பொற் கொல்லன் சொல்லை நம்பிச் செங்கோற் பாண்டியன் கள்ளாக் கோவலனைக் கொன்றான். அவன் சொல் பொய்யென உணர்ந்த பின்றை, யானோ அரசன் யானே கள்வன் என மானத்தால் தன்னுயிர் வழங்க முடிந்ததே யன்றி, வாங்கிய கண்ணகிதன் கொழுநன் உயிரைக் கொடுக்க முடிந்ததுகொல்

தன் இதுஞ்சு அறிந்த வாய்மையால் ஒரோவழி விளையும் பிற கெடுதல்லலின் யெல்லாம் மக்கள் நிரவல் செய்து கொள்வர் உயிர் நீக்கத்திற்கு என் செய்வர்? ஆதலானன்றோ, பிறர் சான்றுகளை நம்பி உயிர்த் தீர்ப்புக் கூறாது. அறக்களத்து நடுவர்கள், பெருங் குற்றத்தானுக்கும் ஆயுட் சிறைத் தீர்ப்பு வழங்குப. அதன் பின்சாரப்