பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 33

கண்டவராவர் மன். ‘வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக: நன்னெஞ்சஞ் சிந்திக்க கேட்க செவி எனச் செயல் காட்டாது நிறுத்தினார் உக்கிரப் பெருவழுதியார். மருதனார், தும்பியார், வழுதியார் உள்ளிட்ட திருவள்ளுவமாலை பாடிய புலவ ரனைவோரும் வள்ளுவர் செயல்நெஞ்சினை மறந்தொழிந்தனர். ஏனைப் புலவோரும் மருந்திற்குங் கூட நினைவுபடுத்தினாரிலர். தனக்குவமை யில்லாக் குறள் பிறந்தும், தமிழ்நாடு வளநாடாக வில்லை. குறள் பிறவா முன் இருந்தமைந்த சீரும் சிறப்பினை யுங்கூட, குறள் பிறந்தபின், அப்பெருநூல் பிறந்த காரணத்தால் அன்று; அதன் செயலடிப்படையை அறமறந்த காரணத்தால், தமிழகம் மக்களோடும் மொழியொடும் இழந்தொழிந்தது. இஃதோர் வியப்பிருந்தவாறென்! -

ஆர்வ நண்பர்களே! வள்ளுவர் நூலமைப்பும் பொருட்பேச்சும் கயமைத்தலைப்பும் எல்லாம் செயல் நோக்கின என்று அறிந்தோம். பின்னும் அறிவோம். சென்னை மக்களவைப் பொருளமைச்சர், தெலுங்குத் தாய்மொழியினர் 1951 - 52ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை ஆங்கில மொழியில் வெளியிடுங்காலும், “பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கு இவ்வைந்து” (738) என்ற குறளை எடுத்தாளக் கண்டு இந்நாள் இன்புறுகிறோம். இந்திய மக்களவைப் பொருளமைச்சர், 1952-53 வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டு வறுமைக்கு வழியுரைக்குங் காலை “இலம் என்று அசைஇ, இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்” (1040) என்ற முயற்சிக் குறளை, குறள் மொழியிலேயே விளம்பக் கண்டு, இந்தியவுரிமை பெற்ற ஞான்றினும் கழிபேருவகை எய்துகிறோம். இங்ஙனம் திருக்குறள் நாமறியவும் ஞாலமறியவும் தன்னாற்றலை உணர்த்தி வருகிறது. காலத்தால் ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுத் தொன்மை சான்ற திருக்குறள், பொருளால் இற்றை அரசியலுக்கும் எடுத்துக் காட்டாவதை உன்னும் போது நல்ல குறளுலகம் நம்முன் தோன்றக் காண்கின்றோம். .

குறள் பிறந்தநாள் தொட்டுத் தமிழும் தமிழ் மக்களும் தமிழ் மன்னரும் அதற்கு அளித்த மதிப்பிடம் யாதுகொல் வழிவந்த தமிழ்ப்