பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப்பெரு மக்களே!

சிால வணக்கம். இன்று நடப்பது இரண்டாவது சொற்பொழிவு. “பலநிலையறம்’ என்பது குறித்து உரையாற்றப் புகுவேன். பலர் திருக்குறட் பேச்சைக் கேட்ட உங்கட்கு இத்தலைப்பு புதிதாகத் தோன்றும். அத்தோற்றப் புத்துணர்வை வரவேற்கின்றேன். திருவள்ளுவர் செயல் நெஞ்சினர் என்று முதற் சொற்பொழிவில் விளங்கக் கண்டோம். செயல் மக்கள்பால் அமைவது யாங்ஙனம்? அனைத்து மக்களையும் செயலாளராக்க வள்ளுவர் கொண்ட முறைகள் யாவை? அவர் அறிந்து தெளிந்த மக்கள் நிலைகள் யா? அவர் கண்ட உலகியல் யாது? இனைய வினாக்களை ஆழ்ந்தகன்று மெய்யுணர்தல் நம் கடன். இம் மெய்யுணர்ச்சி யின்றேல் திறப்பட்ட செயலுணர்ச்சி பிறவாது காண். திருக்குறட்படி செய்வோம் என்று மனத்திட்பம் பெற்ற நாம் திருக்குறளைப் பன்மாணும் அறிவோம் என்றும் வினைத்திட்பம் கொளவேண்டும். அறிவின்றிச் செயலமை யாது. செயலின்றிப் பயன் பிறவாது. அறிவுடைச் செயல்தான் வாழ்க்கை தர மாட்டுவது. ஆதலின் உலகிற்கு ஒரு நூலான திருக்குறளை, எத்துணை வகையான் கற்றுத் தெளிய வொல்லுமோ, அவ்வகையனைத்தையும் மேற்கொண்டு வருந்தித் தெளிதல் தமிழர் பொறுப்பு, அவ்வுலக நூல் தமிழ் மொழியில் எழுதப்பெற்றதாதலின்.

ஞாலமக்களின் தொகை இருநூற்று நாற்பது கோடியென உலக 571-5 கணக்கிடும். அடுக்கிய கோடி கோடி மக்கள், மக்கட் பிறப்பு என்றளவில் ஒரு நிலையினரே யன்றி, வாழ்வில் மற்றுப் பல் வகையானும் எண்ணத் தொலையா வேற்று நிலைப்பட்டவர். பொருள் வரும் வழிகளை ஆக்கிக்கோடல், ஈட்டல், காத்தல், துய்த்தல், ஈதல், இவறல் என்றின்னோரன்ன பொருள் நிலைகளாலும், கற்கும் நோக்கம். நூல், ஆர்வம், முறை, கொள் வன்மை, சுவை, நுண்மை, ஆழம், அகலம் என்றின்னோரன்ன கல்வி : இயற்கை யறிவு, நூலறிவு, நுண்ணறிவு,