பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 65

அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்

அற்றாக அற்றது. இலர் (365) இக்குறள்களோ வாழ்விற்கு இன்றியமையாதன; எனினும் இன்று என் ஆற்றலுக்கு விஞ்சியன. நாட்செல்லச் செல்லப் படிப்படியாகக் கொள்ளற்கு உரியன. இவை முன்னோ பின்னோ ஒரு ஞான்று என் வாழ்வில் அமையத் தகும் செய்குறள்கள். செய்த, செய்யும், செய்குறள்கள் என்னும் பகுத்தறிவோடு குறள்தோறும் நின்று நிலைநினைந்து கற்பதுவே வாழ்வு நலஞ் செய்யும் எனத் தெளிமின் -

நிலையில் தாழாமைக்குச் செய்த குறள்களின் நினைப்பும் நிலை வளர்ச்சிக்குச் செய்யுங் குறள்களிடை அழுத்தமும், செய்குறள்கள்மேல் ஒட்டமும், வேண்டுமாதலின், குறளொதுக்கம் யாண்டும் யார்க்கும் அமையாது காண். மேலும் ஒரு பெரு நூலகத்துக்குப் புகுவார்க்கு இருநிலை உரியன. ஒன்று கல்விநிலை: ஏனையது அறிவு நிலை. வள்ளுவர் ஞாலமக்களைப் பகுத்து உணர்ந்த முறை யாது புறத்தும் அகத்தும் கண்ட மக்கள் நிலைகள் யா? நிலைக்கேற்ப விதித்த வழிகள் யா? உளம் பதிப்பான் ஆளும் சொற்களும் நடைகளும் யா? என ஆசான் அறிவைக் காண்பது கல்விநிலை. இஃதோர் பரந்த முழுக்கல்வி. ஆசிரியன் நெஞ்சங் காண்பதற்கு அவன் செய்த முழுநூற் கல்வி இன்றியமையாதது. இங்ஙன் திருக்குறளைக் கற்றபின், அப்பெருமகன் கண்ட மக்களுள் யான் யார்? நிலைகளுள் என் நிலை யாது? வழிகளுள் எனக்குரிய செயல்வழி எது? எனத் தன்நிலையோடு ஒட்டிய குறட் காட்சியே அறிவுநிலை எனப்படும். இந்நிலையறிவே செயலூக்குகிற்பது. ‘கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறளடி இவ்விரு நிலையையும் ஒருங்கு சுட்டுவது. இதுவே நூல் புகுமுறை யாதலின், கல்வி நிலையில் திருக்குறளை முழுதும் என்றும் சாந்துணையும் கற்க, அறிவு நிலையில் தன்நிலைக்கு ஏற்ற செயற்குறள்களையே நீடு நினைக நினைவுத் திட்பம் பெறுக. கற்பார் நிலையுயர்வே வள்ளுவர் எழுத்துப் பயன் ஆகியர்.

குறள் நண்பர்களே! இனி இன்று மேற்கொண்ட பொருள் நிலைத் தலைப்புப்பற்றி உரை செய்வேன். பொருள் செயல்வகை, ]