பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. ஊழ் ஓரளவு இருக்கும். ஆள்வினையில் மக்களின் செயலுக்கம் மிகுதி ஊழ்வினைக்குக் காரணமான உயிரின் செயலுக்கமும் மிகுதி. ஊழ்வினைக்குக் காரணமான உயிரின் செயல்கள் முன் நடந்தவை ஆள்வினை இப்போது நடப்பது. முன் செய்த வினையின் பயனை நுகர்ந்து கழிப்பதற்காகப் பிறவி அமைந்தது. இப்போது செய்யும் ஆள்வினைகள் பற்றற்றன வாய் இருந்தால் அவை ஊழாகவும் மாறா. அவற்றிற்காகப் பிறவியும் உண்டாகா. பற்றுள்ளனவாய் இருப்பின் முன் ஊழோடு மேலும் சேர்ந்து கொள்ளும், ஊழ்வினை உறுத்து வரும்போதாவது அறிவு திருந்தி இனிச் செய்யும் செயல்களைப் பற்றற்றனவாகச் செய்ய உறுதி கொள்ள வேண்டும் அவ்வாறு செய்து வந்தால் அம்முறைமை முன் ஊழின் வலிமையையும் குறைத்து இனியும் ஊழ்உண்டாகாதபடி செய்து விடும். மற்றொன்று சூழினும் தான் முந்துறும் 380) என்பதில் மற்றொன்று என்பது ஆள்வினை என்னும் முயற்சி. ஆயினும், முன் ஊழ்வினை யின் தாக்குதலை இப்போது செய்யும் பற்றற்ற செயல்களால் ஓரளவாவது உறுதியாகக் குறைத்துக் கொள்ள முடியும். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்று பவர் (620) என்ற குறட்பாவில் ஊழையும் என்பதிலுள்ள உம்மை அதன் வலிமையைப் புலப்படுத்துகிறது. 'உப்பக்கம்' என்பது 'எதிர்ப்பக்கம்': உறுத்து வரும்போது நன்முயற்சிகளால் ஆள்வினைகளால் அதன் வேகத்தைச் சிறிது தணித்துத் தாக்குதல் அணுகி விடாதபடி இடை நடுவே நிறுத்தி எதிர்த்துக் கொண்டிருக்க முடியும். அதற்கே முயற்சியை மக்கள்