பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 114 மொய்த்துக் கொண்டிருந்த தேனீக்கள் கூட்டம் ஞொய் என்ற ஒலியுடன் பறக்கின்றன அந்த இனிய இசையொலியைச் செவிமடுத்த எருமைக்கடா அதன் சுவையில் ஈடுபட்டுக் கொடியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிலையுருவம்போல் நின்று விடுகின்றது. இவ்வாறு ஐயறிவுள்ள எருமைக்கடாவும் இசையில் ஈடுபடும் நாட்டின் தலைவன் இவன் - பெரிய ஆண் யானையைப் போன்றவன் - என்று தோழி அவந்தி நாட்டு அரசகுமாரனை அறிமுகம் செய்து வைக்கின்றாள். இதனால் அவந்தி நாடு நீர் வளமும் நிலவளமும் மிக்க சோலையால் செழித்திருக்கும் என்பதும் பெறப்படுகின்றது. எருமைக்கடாவே இசையில் மிக்க விருப்பமுடைய தாயுள்ளது என்று கூறியதலால் அந்நாட்டி லுள்ளார் இசைச் செல்வத்தில் அளவற்ற அவாவுடையவர் களாக இருப்பர் என்பதும் சொல்லாமல் அமைகின்றது. ஈண்டு எடுத்தல் உயர்த்துதல் உயர்த்திப் பாடுதலை உணர்த்தியது. அவந்தி மாளவ தேசம்.