பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 158 ஆட்சித் தலைவனோ அமைச்சரோ மன்றத்தினரோ, மற்றவரோ அவர்களைத் தடுக்க முற்பட்டால் 'நம் கடமையை நாம் செய்கின்றோம். இந்தப் பெரியோர் நம் கடமையில் ஏன் குறுக்கிட வேண்டும்?' என்று இகழத் தொடங்கி, அது காரணமாக அவர்கட்கு இடையூறும் செய்யத் தொடங்கி னால் அப்போதுதான் அப்பெரியோர் பொறுமை இழந்து எதிர்க்கத் தொடங்குவர். பெரும்பாலும் பொறுமை இழக்காத அவர்கள் ஒருகால் இவ்வாறு பொறுமை இழந்து எதிர்க்கத் தொடங்கினால், எத்தகைய பதவியில் உள்ளவர்களும் அழியவேண்டி நேரும் காரணம் என்ன? தன்னலம் இல்லாமல் பொதுத் தொண்டு செய்ய முற்பட்ட அவர்களுக்கு ஆற்றல் மிகுதி. மக்களின் நல்லெண்ணமும் அவர்கள் சார்பிலேயே திரளும். ஆகையால் அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளக் கூடாது என்பது வள்ளுவர் பெருமானின் அறிவுரையாகும். என்னுடைய வாழ்க்கையில் நேரிட்ட சில நிகழ்ச்சி கனை நினைவுகூர்கின்றேன். சிறு வயது முதற்கொண்டே பொதுத் தொண்டில் அதிக நாட்டமுள்ளவன். எந்தப் பதவியில் இருந்து பணியாற்றினாலும் வருவாயில் கவனம் செலுத்தாது. பொதுவாழ்வில் உள்ள வர்களின் நலத்தினையே குறிக் கோளாகக் கொண்டவன். 1937 முதற்கொண்டே வள்ளுவர் வான்மறையில் மிக்க ஈடுபாடு கொண்டவன். மனம், வாக்கு காயங்களாலும் தீங்கு செய்யாதவன். நாடோறும் உறங்குவதற்கு முன் அன்றாட நிகழ்ச்சிகளை நினைந்து பார்த்து யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்று உறுதி கொண்டு மனத்துக்கண் மாசிலனாக உறங்கி வாழ்ந்து வருபவன். துறையூரில் திருச்சி மாவட்டம் உயர்நிலைப் பள்ளி