பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தாயும் நூலாசிரியரும் ன்ைற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (69) இந்தக் குறளின் பொருளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இதில் உள்ள பொருளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து நோக்க வேண்டும். அவை ( தாய் குழந்தையைப் பெறுதல் 2 பிறந்த குழந்தை வளர்ந்து சான்றோனாகப் புகழ் .ேஆதல் என்பவை. (1) தாய் குழந்தையைப் பெறுதல்: குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளி வருதலைச் சிந்திக்க இதுதான் பிரசவ வேதனை என்பது. உடற் கூற்றுப்படி இதனை விளக்கத் துணிந்தால் பல பக்கங்களாக விரியும் சுருக்கமாக சில செய்திகள் ஈண்டு தரப் பெறுகின்றன. பிரசவ வேதனையின் கால அளவு குழந்தையின் பருமன். தாயின் இடுப்பெலும்புக் கட்டின் அளவுகள். கருப்பைத் தசையின் சுருங்கும் ஆற்றல், தாயின் பொதுவான உடல் நிலை முதலிய பல்வேறு கூறுகளைப் பொறுத்தது. శ{ £'s பிரசவங்கள் பல்வேறு வகையில் நடைபெறுகின்றன. தொண்ணுற்றாறு சதவிகிதம் பிரசவங்களில் தலை உதயமே 1. இந்த ஆசிரியரின் இல்லற நெறி பக். 201-20. பகுதியில் விளக்கப் பெற் பெற்றுள்ளது.