பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

始 波》 ଘ! 除 效 8. மக்கள் iசல்வம் வங்கியில் இலட்சக்கணக்கான பணம் இருப்பு உள்ளவர்களைச் செல்வர் என வழங்குகின்றனர். பழத் தோட்டம், தென்னந்தோப்பு. நஞ்சை புன்செய் உள்ள துற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளவர்களையும் செல்வர் என்றே கூறுகின்றனர். இவர்களையும் இவர்கள் போன்றவர் களையும் செல்வம் உள்ளவர்கள் செல்வச் செழிப்புள்ள வர்கள் என்றும் பேசுகின்றனர். குழந்தைகள் பெற்று இல்லறம் தடத்துபவர்களையும் மக்கள் செல்வம் உடையவர்கள் என்று பொதுமக்கள் பேசுகின்றனர். சிலர் தம் மக்களின் பெயர் கனையும் செல்வம் என்று இட்டு வழங்குகின்றனர். எல்லாப் பெயர்களும் பொருள் குறிப்பன வாதலால் பெற்றோர்கள் தம் பிள்ளையை செல்வம் என்று வழங்குகின்றனர். உண்மையில் அவனே அவளே செல்வம் தானே! வள்ளுவர்பெருமான் குழந்தைகளை மக்கட்பேறு' 2. வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தின் (6) இறுதிக் குறள் 'மங்கலம் என் மனைமாட்சி மற்றதன் நன்மக்கட்பேறு என்பது. இதன் பகிமேலழகர் உரையில் இதனால் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது என்று இருப்பதலால் அடுத்த அதிகாரத்தின் பெயர் 'மக்கட் பேறு (7) என்று இருக்க வேண்டியது முறை. ஆனால் அதற்கு 'புதல்வரைப் பெறுதல் என்ற தலைப்பு தரப்பெற்றுள்ளது. 7-ஆம் அதிகாரத்தின் தொடக்க உரையில் தென்புலத்தார் கடன் புதல்வர்களைப் பெறுதலானும் அல்லது. ஸ்னறதொடர்காணப்பெறுவதால் புதல்வரைப் பெறுதல் என்ற தலைப்பு இட்டனர் போலும் எனினும் 'மக்கட்பேறு என்ற பெயரே அதிகாரத்தின் சரியான தலைப்பு ஆகும்.