பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 52 நோக்கினால் உண்மைகள் சிலபுலனாவதற்கு உதவி செய்யும். ᏑᏍᏕ$ ண் இருபாலாருக்கும் அறிவும் வேண்டும். குணமும் ாடும் ஆயினும் ஆண்மக்களுக்கு அறிவுச் சிறப்பு மிகுவதும் பெண்மக்களுக்குக் குணச் சிறப்பு மேம்படுவதும் இயல்பாய் உள்ளன. இஃது இறைவன் கட்டளை போலும் வாழ்க்கைத் துணை நலம்’ (அதி.6) என்னும் தலைப்புத் தொடரில் நலம் என்னும் நன்மைப் பண்பு சேர்க்கப்பட்டிருப்பதும், அந்த அதிகாரம் முழுவதும் இல்லத் தரசிக்குக் குணநலங்களே கூறப்பெற்றிருப்பதும் இறுதிக் குறளில் மங்கலம் என்ப மனைமாட்சி எனத் தெள்ளத் தெளிவாகப் பண்பு நலம் பகரப் பெற்றிருப்பதும், அந்தப் பண்பு நலத்தின் நன்கலனாகவே நன்மக்கட்பேறு நவிலப் பெற்றிருப் பதும் மேலுண்மைகளை அரண் செய்வதாக அமைகின்றன. மேலும் அறிவைவிடக் குணத்துக்கே வள்ளுவர்பெருமான் சிறப்புக் கூட்டுவதும் தெளிவாகிறது. அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர். மக்கட் பண்பு இல்லாதவர் 1997 என்ற குறளை யும் ஈண்டுச் சிந்திக்கலாம். கீழ்க் கூறிய காரணங்களால் அறிவறிந்த மக்கட் பேறு சிறந்தது என்பதை, ஒரு பிறவியில் பெறுகின்ற பேறாக முதல் குறளிலும் (61 பண்புடைய மக்கட்பேறு சிறந்தது என்பதை எழுமை ஏழு பிறப்புக்கும் உதவும் பேறாக இரண்டாம் குறளிலும்62 வள்ளுவர்பெருமான் எடுத்துக் காட்டியுள்ளமை நம் கவனத்திற்கு உரியது. வாழ்க்கைத் துணைநலம் அதில் அதிகாரத்தில் புகழ் புரிந்தஇல் 49 என இல்லத்தரசியைச் சிறப்பித் திருத்தலும் ஈண்டு நினைவு கூர்ந்து 3 பண்புடைமை 7 4. வாழ்க்கைத் துணைநலம் 9