பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மக்கள் செல்வம் மகிழத்தக்கது. பழியிறங்காதஇல் என்பது அதன் கருத்து என்பது சிந்திக்கத் தகும். இதனால் அறிவும் பண்பு மிக்க வாழ்க்கைக்குச் சிறப்பளிக்கக் கூடிய இருபாற் குழந்தை களையும் மக்கள் என்னும் பொதுப் பெயரால் அப்பெருமான் விதந்து கொண்டு செல்லுதலைச் சிந்திந்து உணர்தல் வேண்டும். 'மக்கட் பேறு அதிகாரத்தில், தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல் (57) “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் இனிது” (68) 'ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (89) “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்" (70) என்ற நான்கு திருக்குறள்களைச் சிந்தித்து ஆய்வோம். இந்த நான்கில் முதலாவதில் தந்தை தன் மகனைக் கல்வி கேள்விகளில் அறிவுடையளவனாய் விளங்கும்படி செய்தலைப் பற்றி பேசப்பெறுகிறது. இந்த அறிவு முயற்சி மகனுக்கு மட்டும் கூறுவதாகக் கொள்ளுவதற்கு இல்லை; மகளுக்கும் உண்டு. அஃதுடன் தாய்க்கும் இதில் கடமை இல்லாமல் இல்லை. அவரவர் இயல்பின் பணி செய்யும் கடமை இருவர்க்கும் உள்ளது. இவ்வுண்மை இதற்கடுத்த இரண்டாவது குறளிலேயே கண்டுகொள்ளும்படி திருவள்ளுவர் பெருமான் பெற்றோர் இருவரையும் கருத்தில் கொண்டு, தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று பன்மையில் பகர்ந்து நம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் விளக்கியுள்ளமை கண்டு தெளியலாம்.