பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரும் குறளும் 17

ஆச்சரியப்பட்டார். அப்பொழுதான் எனக்குத் தெரிந்தது, கவர்னருக்கு இருக்கிற அறிவு குயவனுக்கில்லை,குயவனுக் கிருக்கிற அறிவு கவர்னருக்கில்லை என்று. அதுவரைக்கும் அந்த அறிவு எனக்கு இல்லாமல் இருந்தது.

இப்பொழுது நான் தான் கேட்கிறேன். இதில் அறிவு உள்ளவர் யார்? இல்லாதவர் யார்? இவர் இந்தத் துறை யில் தீட்டியிருக்கிறார்; அவர் அந்தத் யாருக்கு அறிவு துறையில் தீட்டியிருக்கிறார். ஆலை இல்லை? யிலே இருக்கிற தொழிலாளி நூல் அறுந்துபோனால் எப்படி இணைக் கிறது என்ற அறிவைத் தீட்டியிருக்கிறான்.கவிபாடுகின்ற புலவன் கற்பனையிலே தீட்டிக்கொண்டிருக்கிறான்.இதில் அறிவுள்ளவர் யார்? அறிவற்றவர் யார்?

ஆனால், ஒன்று. ஒரே ஆள் இரண்டுபட்டையும், மூன்று பட்டையும், நான்கு பட்டையும், ஐந்துபட்டையும் தங்கள் அறிவுக் கல்லுக்குப் போட்டிருப்பார்கள். அத்தகைய ஆட்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் புலமையிருக்கலாம், தமிழிலும் புலவராயிருக்கலாம், வழக்கறிஞர் தொழிலிலேயும் இருக்கலாம். சிறந்த நூலா சிரியராகவும் இருக்கலாம், நல்ல வியாபாரியாயும் இருக்கலாம், உயர்ந்த பேச்சாளியாகவும் இருக்கலாம். இப்படி ஏழெட்டுப் பட்டைகளை ஒரு ஆள் போட்டிருக்க லாம், முயற்சி காரணமாக எனவே அதிகப் பட்டை போட்டுக் கொண்டவர்கள் குறைந்த பட்டை போட்டுக் கொண்டவர்கள் என்று இருக்கலாமே தவிர, அறிவு இல்லாதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது, இப்போது காட்டுகிறேன் பாருங்கள் திருவள்ளுவரை உங்கள் முன்னே வைத்து. --

திருவள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? தன் அறிவுக் கல்லுக்கு 133 துறைகளிலும் பட்டை போட்டுக்

வ கு-2