பக்கம்:வள்ளுவரும் குறளும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 வள்ளுவரும் குறளும்

கொண்ட ஒரு ஆள். இப்பொழுது பலதுறை அறிவு தெரியும் உங்களுக்குத் திருவள்ளு வர் யார்என்று அவரது அறிவிலே 133 பட்டைகள் ஒளி வீசுகின்றன. அரசன் என்றால் அரசன்; ஆண்டி என்றால் ஆண்டி. மந்திரி என்றால் மந்திரி; பிச்சைக்காரன் என்றால் பிச்சைக்காரன். சூதாடி என்றால் பக்கா சூதாடி, குடிகாரன் என்றால் அசல் குடிகாரன். ஆண் என்றால் ஆண்,பெண் என்றால் பெண். எந்தத் துறையிற் பார்த்தாலும் துறைபோக ஆராய்ந்து முடிவு கட்டிக் கூறிய ஒரு பேரறிஞர். இந்த முடிவு இப் பொழுது என்ன ஆயிற்று தெரியுமா? விஞ்ஞானிகள் எதை எதையோ கண்டுபிடிக்கிற மாதிரி திருவள்ளுவர் யார்?' என்று மேல் நாட்டு மொழிப் புலவர்கள் இப் பொழுது கண்டுபிடித்து விட்டார்கள். அந்த முடிவு என்ன தெரியுமா? திருவள்ளுவர் ஒருவரல்ல, பலர் என் பதே (சிரிப்பு). இந்த முடிவுக்குக் காரணம் என்ன? ஒரு ஆளுக்கு இத்தனை துறையிலும் அறிவு இருந்திருக்க முடியாது; ஆகையினாலே பலபேர் சேர்ந்து திருவள்ளு வரானார்கள் என்று. இது கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த மாதிரி கண்டுபிடித்தது போலும்! அப்படிப் பட்ட சிறப்புடையவர் வள்ளுவர். திருவள்ளுவரைப் பற்றி இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன்,

அடுத்தது திருவள்ளுவர் சமயம் என்ன? அது ஒரு போராட்டம். நான் சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது செந்தமிழ்ச் செல்வி' பத்திரிகை வரும், முதல் இதழில் திருவள்ளுவர் சைவ சமயியே என்று இருக்கும். அடுத்த இதழில் இன்னொரு புலவர் திருவள்ளுவர் வைணவ சமயியே என்று எழுதியனுப்புவார். திருவள்ளுவர் சமயம் அடுத்த இதழ் திருவள்ளுவர் புத்த சமயியே என்று வரும். அடுத்த இதழ் அருக சமயியே என்று வரும். இப் போராட்டம் இந்த